எங்கள் PlayOff கனவை தவுடுபுடி செய்தது இவர் தான் ; கே.எல்.ராகுல் ஓபன் டாக் ; முழு விவரம் இதோ ;

நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற 48வது போட்டியில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதினர். அதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 164 ரன்களை அடித்தனர். விராட்கோலி 25, தேவுதத் படிக்கல் 40, மேக்ஸ்வெல் 57, டிவில்லியர்ஸ் 23 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஆனால் இறுதிவரை போராடி 158 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் கே.எல்.ராகுல் 39, மயங்க அகர்வால் 57, பூரான் 3, மார்க்ரம் 20, ஷாருகான் 16, போன்ற ரன்களை எடுத்துள்ளனர். அதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பெங்களூர் அணி.

பெங்களூர் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 8 போட்டியில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி, ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதியும் பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் அளித்த பேட்டியில் ; நான் ஆரஞ்சு கேப் பெறுவதில் எனக்கு சந்தோஷம் தான். ஆனால் எங்கள் அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தால் நிச்சியமாக இன்னும் நாங்கள் சந்தோசமாக இருந்திருப்போம். ஆனால் அப்படி நடக்கவில்லை.

அவர்கள் அடித்த ரன்களை அடித்திருக்கலாம், ஆனால் 15 ரன்கள் கிட்டத்தட்ட அதிகமாக போனது. அதில் மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை அதிகப்படுத்தினர். அது தான் எங்களுக்கு மிகவும் கடினமாக போனது என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.

ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிக மிக அரிது தான். இந்தமுறை யார் கோப்பையை கைப்பற்ற போகிறார்கள் என்று நீங்கள் COMMENT பண்ணுங்க..!