இந்திய அணியில் இவரை எடுக்கணும் ; இவருடைய திறமையை வீணடிக்க கூடாது ; சேவாக் பிசிசிஐ-யிடம் வேண்டுகோள் ; யார் அந்த வீரர் ?

0

IPL 2021: ஐபிஎல் 2021 போட்டிகளின் இரண்டாம் பாகம் ஆரம்பித்து சிறப்பான முறையில் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்று வருகிறது. அதில் பல இளம் வீரர்கள் அவரவர் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல, சில கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் வீரர்களை பற்றி அவரவர் கருத்துக்களை பகிர்வது வழக்கம். அதேபோல, சேவாக் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் அறிமுகம் ஆன பிறகு இந்திய அணியில் சரியான வீரர்களை தேர்வு செய்வது சுலபமாக போய்விட்டது. ஆனால் தொடர்ந்து சில சீசன் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக இந்திய அணியில் இடம்பெற்றுவிடலாம்.

அதேபோல, தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்தர் சேவாக் ஐபிஎல் வீரரை பற்றி அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். அதனை பற்றி பேசிய அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பவுலர் அர்ஷிதீப் சிங் சிறப்பாக விளையாடி வருகிறார்.

அவர் கடந்த மூன்று நாட்களாக சாஹீர் கான் சொல்லி கொடுத்து ஸ்விங் பவுலிங் செய்துள்ளார். இதே அவர் இன்னும் கொஞ்சம் நாட்கள் பயிற்சி எடுத்தாள் இந்திய அணிக்கு தேவையான பவுலராக இவர் இடம்பெற அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் பிசிசிஐ இவரது (அர்ஷதீப் சிங்) விளையாட்டை கவனிக்க வேண்டும்.

அர்ஷதீப் ஒரு சிறந்த பவுலர், மிகவும் கடினமாக உழைத்து கொண்டு வருகிறார். அதனால் இவரால் சிறந்த பவுலிங்கை இந்திய அணிக்காக வெளிப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார் விரேந்தர் சேவாக். இவர் இந்த ஆண்டு ஐபிஎல் 2021யின் முதல் சில போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

அதன்பின்னர், இவர் விளையாடிய 11 போட்டிகளில் 16 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் அர்ஷதீப் சிங். அர்ஷதீப் சிங் விளையாடி வரும் பபஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் மட்டுமே வெற்றியை கைப்பற்றியது.

அதனால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் வருவது மிகவும் கடினம் தான். ஏனென்றால் இதுவரை மூன்று அணிகள் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் இன்னும் ஒரு அணி மட்டுமே தேர்வாகும் நிலையில், அந்த இடத்திற்கு கடும் போட்டிகள் நிலவி வருகிறது.

பஞ்சாப் அணிக்கான இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது..! அதில் வெற்றி பெற்றால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ?? இல்லையா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here