எங்கள் அணியின் மிகப்பெரிய சொத்து இவர் தான் ; அதனால் தான் இந்திய அணியை வென்றோம் ; தென்னாபிரிக்கா வீரர் பவுமா பேட்டி

நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

நிர்ணயக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 296 ரன்கள் அடித்தனர். அதில் டி-காக் 27, ஜன்னேமன் மலன் 6, தெம்பா பவுமா 110, மர்க்கரம் 4, டூஸ்ஸன் 129,மில்லர் 2 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது இந்திய.

ஆனால் இறுதி ஓவர் வரை போராடி தோல்வியே சந்தித்தது இந்திய அணி. இறுதி வரை போராடிய இந்திய அணி 8 விக்கெட்டை இழந்து 265 ரன்களை மட்டுமே கைப்பற்றியது இந்திய. அதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதில் கே.எல்.ராகுல் 12, ஷிகர் தவான் 79,விராட்கோலி 51, ஷ்ரேயாஸ் ஐயர் 17, ரிஷாப் பண்ட் 16, வெங்கடேஷ் ஐயர் 2, ரவிச்சந்திரன் அஸ்வின் 7, ஷர்டுல் தாகூர் 50, புவனேஸ்வர் குமார் 4 மற்றும் பும்ரா 14 ரன்களை அடித்துள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு வெற்றியை பெற்றதை பற்றி தென்னாபிரிக்கா அணியின் கேப்டனான தெம்பா பவுமா. வெற்றியை குறித்து கூறுகையில் ; நாங்கள் மிகவும் சிறப்பான விளையாட்டை விளையாடியுள்ளோம். அதனால் எங்களுக்கு அதிக நம்பிக்கை எழுந்துள்ளன. டூஸ்ஸன் ஏதோ இன்னொருவர் விக்கெட்டில் விளையாடியதை போல விளையாடினார்.

அவருடன் என்னால் முடிந்த வரை நான் சிறப்பாக தான் பார்ட்னெர்ஷிப் செய்தேன். எங்கள் அணியில் இருக்கும் ஐடீன் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எங்களது சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு விளையாடினார். அவருக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று. டெத் ஓவரில் சிறப்பாக பவுலிங் செய்தார் ஷம்சி.

அதுமட்டுமின்றி மீண்டும் எங்கள் (தென்னாபிரிக்கா) அணியில் டி-காக் மீண்டும் அணியில் விளையாட வந்துள்ளார். அவர் மிகப்பெரிய வீரர், அவருடைய பங்களிப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறியுள்ளார் தெம்பா பவுமா…..!!!