அடுத்த போட்டியில் ஆவது இவரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்குமா இந்திய அணி ? ஒருவாய்ப்பு கொடுத்து பாருங்க தம்பி மாஸ் பண்ணிடுவார் ..!

0
Advertisement

என் இந்த பையனுக்கு மட்டும் வாய்ப்பே கிடைக்கமாட்டிங்குது ??

நேற்று மதியம் 2 மணியளவில் தொடங்கியது இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி. அதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி அடித்து தொம்சம் செய்தனர். நிர்ணயக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 296 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது இந்திய. ஆனால் தோல்வியே மிஞ்சியது. இறுதி வரை போராடி 8 விக்கெட்டை இழந்த நிலையில் 265 ரன்களை அடித்தது இந்திய. அதில் கே.எல்.ராகுல் 12, ஷிகர் தவான் 79, விராட்கோலி 51, ரிஷாப் பண்ட் 16, ஷ்ரேயாஸ் ஐயர் 17, ரவிச்சந்திரன் அஸ்வின் 7, வெங்கடேஷ் ஐயர் 2, ஷர்டுல் தாகூர் 50, புவனேஸ்வர் குமார் 4 மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ரா 14 ரன்களை அடித்துள்ளனர்.

அதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது தென்னாபிரிக்கா அணி. இந்திய அணியில் இருந்தும் அதிக திறமை இருந்தும் ஏன் ? வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை ? ஆமாம்….!! இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் கடந்த ஐபிஎல் டி20 2021 போட்டி முதல் இப்பொழுது வரை அதிரடியாகவே விளையாடி வருகிறார்.

ஐபிஎல் டி20 2021யில் அதிக ரன்களை அடித்து முதல் இடத்தை கைப்பற்றி சாதனை படைத்தார். அதன்பிறகு விஜய் ஹசாரே கோப்பையிலும் தொடர்ந்து மூன்று சதம் அடித்தார். அதனால் இந்திய அணிக்கான சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இவர் (ருதுராஜ் கெய்க்வாட்) இடம்பெருவார் என்று பல வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஆனால் நேற்று நடந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் -க்கு வாய்ப்பே கொடுக்கப்படவில்லை. ஆமாம் ..! அவருக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்படி வாய்ப்பு கொடுத்தும் 2 ரன்களில் ஆட்டம் இழந்துள்ளார். இதற்கு ருதுராஜ் கெய்க்வாட் -க்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2021, சையத் முஸ்தக் அலி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே போன்ற போட்டிகளில் தொடர்ந்து சாதனை செய்து வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட். இப்படிப்பட்ட இளம் வீரருக்கு ஏன் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பண்ணுங்க….!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here