ரோஹித் இல்லை ; இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த இவர் தான் சரியான ஆளு…! இவருக்கு நிகர் இவரே ; ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வோர்ன் பேட்டி ;

0

ஐயோ… இந்திய அணியின் கேப்டன் பற்றிய பிரச்சனை தினம்தோறும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. அதனை பற்றி ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஷேன் வோர்ன் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

கடந்த ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டிக்கு பிறகு நான் கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக விராட்கோலி கூறினார். அதன்பின்னர், விராட்கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக இருந்து வந்தார். ஆனால், அது நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. ஆமாம்… ! பிசிசிஐ-யின் அதிரடி முடிவால் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக இருந்த விராட்கோலியை விலக்கி விட்டு ரோஹித் சர்மாவை அறிவித்தனர்.

அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகவும் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் வெறும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக மட்டும் விளையாடி வந்தார் விராட்கோலி. அதில் கேப்டனாக இருந்து பல சாதனைகளை செய்வார் என்று பல கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு வந்தனர். ஆனால் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 1 போட்டியில் மட்டுமே வென்று தொடரை கைப்பற்றவில்லை.

அதனால் விரக்தி அடைந்த விராட்கோலி நான் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகுகிறேன் என்று அவரே முடிவு செய்தார். இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார். இப்பொழுது தான் இந்திய அணிக்கு பிரச்சனையே உள்ளது.

ஆமாம்… ! யார் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் என்ற கேள்வி தினம்தோறும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டனாக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி அவருக்கு இப்பொழுது 35 வயது ஆகிவிட்டது. பின்னர் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது. அதனால் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக ரோஹித் சர்மா இடம்பெறுவது சிரமம் தான்.

இதனை பற்றி பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஷேன் வோர்ன் அளித்த பேட்டியில் ; இந்திய அணிக்கு ஒரு பயமும் இல்லை. ஆமாம்… ஏனென்றால் அடுத்த கேப்டனாக இருக்க பல வீரர்கள் உள்ளனர். ஆனால் எனக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான். ஏனென்றால் ரோஹித் சர்மா இப்பொழுது டி20 மற்றும் ஒருநாள் போட்டியை கவனித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி ஒரு விக்கெட் கீப்பர் கேப்டனாக இருக்க கூடாது. வேண்டுமானால் துணை கேப்டனாக இருந்துக்கலாம். டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரஹானே மிகச்சிறந்த வீரர் தான், ஆனால் சமீப காலமாக அவருடைய ஆட்டம் ஏதும் பெரிய அளவில் பேசப்படவில்லை. இருந்தாலும் கடந்த முறை விராட்கோலி இல்லாத அப்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அவர் என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அவர் இன்னும் அதேபோல ரன்களை அடிக்கிறாரா ? இல்லையா ? என்பதை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஷேன் வோர்ன். டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக யாராக இருக்கும் என்ற கேள்வி மட்டுமின்றி அதற்கு பதிலை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். நீங்க சொல்லுங்கள் ரசிகர்களே யார் கேப்டனாக இருக்க வேண்டுமென்று…? Comments பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here