சச்சின் டெண்டுல்கரை போல இவரெல்லாம் கிடையாது ; ஆனால் நிச்சியமாக ரோகித் சர்மா இவரை ஆதரிப்பார் ; முன்னாள் இந்திய வீரர் உறுதி ;

அட…அட… இந்திய அணியின் கேப்டன் பற்றிய சர்ச்சை தினம்தோறும் எழுந்து கொண்டே இருக்கிறது. ஆமாம்… கேப்டனாக இருந்த விராட்கோலிக்கு பிறகு இப்பொழுது இந்திய அணியை வழிநடத்தி வருகிறார் ரோஹித் சர்மா.

ஆனால் பல ஆண்டுகளாக ரோஹித் சர்மா மற்றும் விராட்கோலி ஆகிய இருவருக்கும் சண்டை இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஏனென்றால் தோனிக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்த விராட்கோலி மற்றுமின்றி ரோகித் ஷர்மாவுக்கு ஆர்வமாக இருந்தார். ஆனால் அப்பொழுது தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் உதவியால் விராட்கோலி கேப்டனாக இடம்பெற்றுள்ளதாக பல தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு விராட்கோலியின் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் கடந்த இரு ஆண்டுகளாக சதம் அடிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, சச்சின் டெண்டுல்கர் அடித்த 100 சதம் சாதனையை விராட்கோலி தான் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அளித்த பேட்டியில் ;

ஒரு தனி வீரராக 50 ரன்களை 100 ரன்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் சமீப காலமாக விராட்கோலி அப்படி செய்வதே இல்லை, முன்பு போல விளையாடுவது இல்லை, ஆதிக்கத்தை செலுத்துவதும் இல்லை, விராட்கோலியை போலவே சச்சின் , ராகுல் டிராவிட் போன்ற வீரர்கள் விளையாடி உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் ரன்களை திரட்டி கொண்டு விளையாடினார்கள் , விராட்கோலி அப்படி இல்லை.

ஆனால் இப்பொழுது ஒரு விஷயம் உறுதி. அதில் இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்த உள்ளார் ரோஹித் சர்மா. அதுமட்டுமின்றி, அனைவருக்கும் தோன்றும் ஒரே எண்ணம், ரன்களை அடிக்க வேண்டும் என்பது மட்டும் தான். ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பதால் நிச்சியமாக விராட்கோலிக்கு ஆதரவாக இருக்கும்.

அதனால் விராட்கோலி இனிமேல் 50 ரன்களை அடித்த பிறகு சதம் அடிக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டியது இல்லை, அதுவும் ஒரு கேப்டனாக, இப்பொழுது விராட்கோலியின் வேலை மாற்றிவிட்டது என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா…..!