இந்திய அணி இப்பொழுதுதான் சரியான நபரிடம் உள்ளது ; இவர்கள் இருவரும் ஆட்டம் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் ; முன்னாள் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஓபன் டாக் ;

கடந்த ஆண்டு இறுதியில் நடந்து முடிந்த ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார் ரவி சாஸ்திரி. பின்னர் யார் தலைமை பயிற்சியாளர் என்று பல கேள்விகள் எழுந்தன.

பல முன்னாள் வீரர்கள் பதிவு செய்த போதிலும், இறுதியாக என்ட்ரி கொடுத்த ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவிக்கு பதிவு செய்தார். பின்னர் மாற்றுக்கருத்து இல்லாமல் ராகுல் டிராவிட் தான் தலைமை பயிற்சியாளர் என்று கூறியுள்ளது பிசிசிஐ. பின்னர் ராகுல் ட்ராவிட் பொறுப்பேற்று வழிநடத்திய இந்திய அணி நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியை கைப்பற்றியது.

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல போகிறார்கள் என்று பலர் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் இதை பற்றி கூறுகையில் ;

இன்னும் இந்திய வீரர்கள் விளையாட அதிக போட்டிகள் உள்ளது. ராகுல் டிராவிட் பயிற்சியாளாராக நிச்சியமாக அனைத்து வீரர்களிடமும் பேசி அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அவரால் உணர முடியும். அதுமட்டுமின்றி, இப்பொழுது கொரோனா காலம் என்பதால் எப்பொழுது யாருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும்.

இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணி சிறந்த பயிற்சியாளர் கையில் உள்ளது என்பது தான் உண்மை என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக். ராகுல் டிராவிட் வழிநடத்திய இந்திய அணி தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் மோசமான நிலையில் இருந்தது தான் உண்மை.

ஒருநாள் போட்டியில் 0 – 3 மற்றும் டெஸ்ட் போட்டியில் 1 – 2 என்ற கணக்கில் இந்திய அணி பின்னடைவை சந்தித்த காரணத்தால் தொடரை கைப்பற்றாமல் அணியில் வெளியேறியது. தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான போட்டியில் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக கே.எல்.ராகுல் தான் வழிநடத்தியுள்ளார்.

அதில் ஏன் அதிக திறமை இருந்தும் அவருங்கன வாய்ப்பு வழங்கப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆமாம் ..! ஏனென்றால் ராகுல் டிராவிட் எப்பொழுதும் இளம் வீரரை ஆதரித்து கொண்டு வரும் வீரர் தான். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இடம்பெற்றுள்ளார் ருதுராஜ், ஆனால் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்குமா ? இல்லையா ?