இவர் என்ன இப்படி விளையாடுகிறார் ? எப்போ இந்திய அணியில் இருந்து வெளியேற்ற போறீங்க..! இந்திய ரசிகர்கள் வேதனை…!

நேற்று மதியம் 1:30 மணியளவில் சிறப்பாக நடைபெற்று நடந்து முடிந்துள்ளது இரண்டாவது ஒருநாள் போட்டி. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் செய்ய போவதாக கேப்டன் பூரான் முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கியது இந்திய அணி.

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் களமிறங்கினார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு பார்ட்னெர்ஷிப் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆமாம் ரோஹித் சர்மா 5 மற்றும் ரிஷாப் பண்ட் 18 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்துள்ளனர்.

அதன்பின்னர் கே.எல்.ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் சிறப்பான முறையில் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை அடித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 237 ரன்களை அடிக்க முடிந்தது. பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. இறுதிவரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 193 ரன்களை மட்டுமே அடித்தது. அதனால் இந்திய கிரிக்கெட் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்றது. அதுமட்டுமின்றி 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருப்பதால் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இதற்கிடையில், இவர் என்ன இப்படி விளையாடி கொண்டு வருகிறார் என்று ரசிகர்கள் ஆவசேப்படுகின்றனர். டெஸ்ட் போட்டியில் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் சரியாகி விளையாடவில்லை என்ற காரணத்தால் சர்வதேச போட்டியில் இருந்து விளக்கி ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட வைத்துள்ளது பிசிசிஐ.

அதேபோல தான் ரிஷாப் பண்ட் கடந்த சில போட்டிகளாக எதிர்பார்க்கும் அளவிற்கு விளையாடுவது இல்லை. சமீபத்தில் நடந்து முடிந்த சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 16, 85 மற்றும் 0 ரன்களை அடித்துள்ளார் ரிஷாப் பண்ட். இப்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 மற்றும் 18 ரன்களை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை அடிக்காத ரிஷாப் பண்ட் மட்டும் இன்னும் ஏன் ? அணியில் இருக்கிறார் என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.