சுரேஷ் ரைனாவுக்கு வலை வீசும் இரண்டு ஐபிஎல் அணிகள் இதுதான் ; சிஎஸ்கே அணி என்ன செய்ய போகிறது ?

0

ஐபிஎல் டி20 2022 போட்டிக்கான ஏலம் இன்னும் இரு தினங்களில் நடக்கப்போகிறது.

வருகின்ற 12 மற்றும் 13ஆம் தேதிகளில் இந்த மெகா ஏலம் நடைபெற உள்ளதாக பிசிசிஐ உறுதியாக கூறியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த முறை மெகா ஏலம் நடத்த ஒரே காரணம் லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் அனைத்து அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியது பிசிசிஐ.

தக்கவைக்கப்பட்ட வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்தில் இடம்பெற போகிறார்கள். அதற்கான வீரர்கள் பட்டியலையும் வெளியிட்டது பிசிசிஐ. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, மஹேந்திர சிங் தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது சிஎஸ்கே.

இதில் கடந்த ஆண்டு ஐபிஎல் டி20 லீக் போட்டியில் சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் தொடக்கத்தில் ஒரு அளவிற்கு இருந்தது. ஆனால் போக போக அவரது விளையாட்டு சொல்லும் அளவிற்கு இல்லை. அதனால அவருக்கு பதிலாக ராபின் உத்தப்ப இடம்பெற்றார். ராபின் உத்தப்ப முதல் சில போட்டிகளில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தார். ஆனால் இறுதி போட்டியில் சரியாக விளையாடிய ராபின் உத்தப்ப சிஎஸ்கே அணி வெற்றி பெற முக்கியமான காரணமாக இருந்துள்ளார்.

ஐபிஎல் டி20 ஆரம்பித்த காலத்தில் இருந்தும் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். ஆனால் சிஎஸ்கே அணியில் தக்கவைக்காதது அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்கிடையில் சுரேஷ் ரெய்னா ஏலத்தில் பங்கேற்க போகிறார். அதனால் எந்த அணியில் இடம்பெருவார் என்று பல குழப்பங்கள் எழுந்துள்ளன.

ஆனால் சுரேஷ் ரெய்னா, இரு அணிகளில் கைப்பற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக அறிமுகமாகியுள்ள லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னாவை கைப்பற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்பொழுது வரை சுரேஷ் ரெய்னா விளையாடி வருகிறார். அதனால் அவருக்கு அதிக அனுபவம் உள்ளது என்ற காரணத்தாலும் லக்னோ ஒரு புதிய அணி என்பதால் சுரேஷ் ரெய்னா இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

ஐபிஎல் டி20 லீக் போட்டிகளில் கடந்த ஆண்டு மிகவும் மோசமான இடத்தில் இருந்த அணி தான் சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணி. அதிலும் முக்கியமாக கேப்டன் பற்றிய சர்ச்சை தான். அதுமட்டுமின்றி சன்ரைஸ்சர்ஸ் அணியின் உரிமையாளர் அளித்த பேட்டியில்; சுரேஷ் ரெய்னாவை நாங்கள் கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் கையில் எடுப்போம்.

ஏனென்றால் அவருக்கு அதிக அனுபவம் உள்ளது. அதுமட்டுமின்றி அவரது பீல்டிங் பார்ப்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று , ஏனென்றால் அற்புதமாக பீல்டிங் செய்து வருகிறார் என்று கூறியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்களே நீங்க சொல்லுங்க…!! சுரேஷ் ரெய்னா எந்த அணியில் இடம்பெற வேண்டும்..?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள Comments பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here