புஜரா, ரஹானே இல்லையென்றால் என்ன ? அதற்கு தான் இவர் அணியில் இருக்கிறாரே ; ரோஹித் சர்மா புகழாரம்

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளும் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய சிரிக்கெட் அணி 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 252 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள், ரிஷாப் பண்ட் 39 ரன்கள், ஹனுமா விஹாரி 31 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் முதல் இன்னிங்ஸ் – ல் களமிறங்கிய இலங்கை அணி 109 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இந்திய அணி முன்னிலையில் இருந்தன.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் – ல் களமிறங்கிய இந்திய அணி 303 ரன்களை அடித்தது இந்திய அணி. அதில் ரிஷாப் பண்ட் 50, ஷ்ரேயாஸ் ஐயர் 67, ரோஹித் சர்மா 46, ஹனுமா விஹாரி 35 ரன்களை அடித்தனர். பின்னர் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் போட்டியில் 208 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது.

இந்திய அணி மூன்று டி 20 மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று இலங்கை அணியை வாஷ் அவுட் செய்தனர். போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் ; “எனக்கு தனிப்பட்ட முறையில் இந்திய அணி அதிக ரன்களை அடித்து வெல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன்.”

“அதனை செய்துவிட்டேன். இதற்கிடையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அவரது வேலையை செய்து முடித்துள்ளார். அவர் ஒரு பேட்ஸ்மேனாக களமிறங்கி வெளுத்து வாங்கினார். அதுமட்டுமின்றி, 7வதாக பேட்டிங் செய்வதில் இந்திய அணி இறுதி வரை அதிக ரன்களை அடிக்க முடிகிறது. ரவீந்திர ஜடேஜா ஒரு ஆல் ரவுண்டர், அவரது பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் போன்ற அனைத்து விஷயங்களையும் சிறப்பாக விளையாடி வருகிறார்.” ரோஹித் சர்மா.

“மேலும் ஷ்ரேயாஸ் ஐயர் பற்றி பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் ; கடந்த டி20போட்டியில் இருந்து இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வந்துள்ளார் ஐயர். அதுமட்டுமின்றி இந்திய அணியின் முக்கியமான வீரர்களான ரஹானே மற்றும் புஜரா இடத்தை அவர் தான் சிறப்பாக விளையாடி வருகிறார். அது அவருக்கு நன்கு தெரியும் , அதனை சிறப்பாக தான் செய்து வருகிறார் ஷ்ரேயாஸ் ஐயர் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா”.