தோனி கூட வாழவே முடியாது ; நீங்க நினைக்கின்ற மாதிரி தோனி இல்லை ; சாக்‌ஷி ஓபன் டாக்

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பிடித்த வீரர் யார் என்று கேட்டால் அதில் பலர் சொல்லும் ஒரே பதில் மகேந்திர சிங் தோனி தான். கடந்த 2004 ஆம் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். பின்னர் படிப்படியாக சிறப்பாக விளையாடிய தோனி இந்திய அணியின் கேப்டனாகவும் பொறுப்பேற்றார்.

அதில் தொடக்கத்தில் பல தோல்விகளை மற்றும் பல எதிர்ப்புகளை சந்தித்து வந்துள்ளார் தோனி. பின்னர், இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்தி அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளை பெற்ற ஒரே வீரர் மற்றும் கேப்டன் தோனி தான் என்ற பெருமையும் பெற்றார்.

அந்த இடைப்பட்ட காலத்தில் தான் மகேந்திர சிங் தோனி மற்றும் சாக்‌ஷி இடையே காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். பின்னர் ஐபிஎல் போட்டிகள் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து தோனி இப்பொழுது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

இதுவரை மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை பெற்றுள்ளது சென்னை அணி. இது போல பல சாதனைகளை செய்துள்ளார் தோனி என்பதை மாற்றுக்கருத்தில்லை. சமீபத்தில் தோனியின் காதல் மனைவியான சாக்‌ஷி  அளித்த பேட்டியில் தோனியை பற்றி சில முக்கியமான கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

அதில் ” சத்தியமாக தோனி கூட வாழ்வது அவ்வளவு சுலபம் இல்லை. ஏனென்றால் எங்கனால் நிம்மதியாக தனியாக ஒரு இடத்திற்கு போகவே முடியாது. நாங்க எங்க போனாலும் ரசிகர்கள் கூட்டம் எங்களை சூழ்ந்துவிடும். அதனால் தனிமையில் கூட சந்தோசமாக இருக்கவே முடியாது.

“அதுமட்டுமின்றி என்னுடைய நம்பர்கள் பிறந்த நாள் அல்லது திருமணம் செய்து கொண்டு நடக்கும் நிகழ்ச்சிகளில் நான் அவ்வப்போது செல்வதே இல்லை. ஏனென்றால் அங்கு ஏதாவது தெரியாமல் நடந்தால் கூட அதனை தவற சித்தரித்து பேசுவார்கள். அதனால் தோனிக்கு அந்த பெயரை நான் வாங்கிக்கொடுக்க விரும்பவில்லை.”

“அதனாலயே நான் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதே இல்லை. ஆனால் மகேந்திர சிங் தோனி என்னுடைய கணவராக கிடைத்தது எனக்கு மட்டுமின்றி என்னுடைய குடும்பத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. அவர் (தோனி ) எங்கள் அனைவரையும் நன்கு கவனித்து கொள்கிறார் என்று பெருமையுடன் பேசியுள்ளார் சாக்‌ஷி “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here