இந்திய அணியில் இவர் மட்டும் இல்லாமல் இருந்தால் நாங்க தான் தொடரை கைப்பற்றிருப்போம் ; மார்க் பவுச்சர்

சமீபத்தில் தான் ரிஷாப் பண்ட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் ஐந்து டி-20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

அதில் முதல் இரு போட்டிகளில் தென்னாபிரிக்கா அணியும், அடுத்த இரு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியும் வென்றுள்ளனர். அதனால் ஐந்தாவது போட்டி மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. ஆமாம், யார் வெற்றியை கைப்பற்ற போகிறார்களோ, அவர்கள் தான் தொடரை கைப்பற்ற முடியும்.

ஆனால் எதிர்பாராத வகையில் மழை பெய்த காரணத்தால் தீடிரென்று போட்டியை நிறுத்தினார்கள். அதனால் போட்டிகள் சம நிலையில் முடிந்தது. இதனை பற்றி பேசிய தென்னாபிரிக்கா அணியின் பயிற்சியாளர் மார்க் பவுசர் தொடரை கைப்பற்றாமல் போனதற்கு இதுதான் காரணம் என்று கூறியுள்ளார்.

அதனை பற்றி பேசிய மார்க் பவுசர் கூறுகையில் ; ” எனக்கு தெரிந்து இந்திய மற்றும் தென்னப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 சீரியஸ் போட்டிகளில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பவுலிங் செய்தார். அவர் (புவனேஷ்) பவர் ப்ளே-வில் பவுலிங் செய்த காரணத்தால் ரன்களை அடிக்க முடியாத நிலை உருவானது.”

“அதுமட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அணி பவுலிங்கில் மட்டுமின்றி பேட்டிங் செய்வதிலும் சிறப்பாக விளையாடினார்கள் என்று கூறியுள்ளார் மார்க் பவுன்சர்.”

ஜூன் 26 மற்றும் 28ஆம் தேதி போன்ற இரு தினங்களில் இந்திய மற்றும் அயர்லாந்து போன்ற இரு அணிகளும் விளையாட உள்ளனர். அதில் ரிஷாப் பண்ட் இல்லாத காரணத்தால் ஹர்டிக் பாண்டிய கேப்டனாக இந்திய அணியை வழிநடத்த போவதாகவும், அவருக்கு புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் இடம்பெற்ற இந்திய அணியின் விவரம் இதோ ;

ஹர்டிக் பாண்டிய, புவனேஸ்வர் குமார், ருதுராஜ், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், அக்சர் பட்டேல், தினேஷ் கார்த்திக், அவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல், உம்ரன் மாலிக், அர்ஷதீப் சிங், யுஸ்வேந்திர சஹால் மற்றும் ரவி பிஷானி.