உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்யப்போவது இவர்கள் தான் ; கே.எல் ராகுல் இல்லை

உலகக்கோப்பை போட்டி :

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை டி-20 2021 போட்டி இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அதில் இந்தியா அணி மிகவும் மோசமான நிலையில் தோல்வியை பெற்று அரை இறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது ரசிகர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் சரியான வீரர்களை தேர்வு செய்வதிலும் கவனத்தை செலுத்தி வருகின்றனர். ஆமாம், அதேபோல தான் இந்திய கிரிக்கெட் அணி.

இருப்பினும் ஒரு அணியின் தொடக்க வீரர்கள் சரியாக பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை அடித்தால் நிச்சியமாக அந்த அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக தான் இருக்கும். இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்யப்போவது யாராக இருக்கும் என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

ஆமாம், ஏனென்றால் கே.எல்.ராகுலுக்கு இன்னும் நாட்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அவரால் நிச்சியமாக உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான்.

அப்படி பார்த்தால் யார் ரோஹித் ஷர்மாவுடன் பார்ட்னெர்ஷிப் செய்ய போகிறார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. அது நிச்சியமாக இஷான் கிஷான் ஆக தான் இருக்கும். அதனால் தான் தென்னாபிரிக்கா , அயர்லாந்து போன்ற சீரியஸ் போட்டிகளில் இஷான் கிஷானுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷான் தான் அதிகபட்சமாக 206 ரன்களை அடித்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் இப்பொழுது பெரிய அளவில் அவரது பேட்டிங் இல்லாத காரணத்தால் நிச்சியமாக இஷான் கிஷானுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஒரேவேளை அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக ஜூலை மாதத்தில் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு நிச்சியமாக இருக்கும்..!

அப்போ தவான் ஓப்பனிங் இல்லையா ?

ஐபிஎல் 2022 போட்டிகளில் 460 ரன்களை அடித்த ஷிகர் தவானுக்கு தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அப்படி இருக்கும் நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா ?

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற உலகக்கோப்பை டி-20 போட்டிகளில் ஷிகர் தவான் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.