ஹார்டிக் பாண்டிய இடத்திற்கு இவர் சரியாக இருப்பார் ; இது எப்பையோ முடிவு செய்தது தான் ; இந்திய முன்னாள் வீரர் ஓபன் டாக் ; யார் அந்த வீரர் ?

சமீப காலமாக ஹார்டிக் பாண்டியவை பற்றி கருத்துக்கள் அனைத்து வரிசையாக வந்துகொண்டே இருக்கின்றனர். அதுதான் உண்மை. ஏனென்றால் கடந்த ஆண்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர், அவரால் சரியாக பவுலிங் மற்றும் பேட்டிங் செய்ய முடியாமல் போனது. அதாவது பழைய பாண்டிய எங்கே என்ற அளவுக்கு போனார் ஹார்டிக் பாண்டிய.

பின்னர் ஐபிஎல் இரண்டாம் பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த பொழுது கூட அவரால் பவுலிங் செய்ய முடியவில்லை. வெறும் பேட்டிங் மட்டுமே செய்து கொண்டு வந்தார். பின்னர் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற்றது ரசிகர்கள் இடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது தான் உண்மை.

அவர் (ஹார்டிக் பாண்டிய) தான் சமீப காலமாக சரியாகவே விளையாடுவது இல்லை. பின்னர் அவரை எப்படி உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அவரை தேர்வு செய்ய முடியும் என்று பல கேள்விகள் எழுந்தது. அதேபோல தான் உலகக்கோப்பை போட்டியில் ப்ளேயிங் 11ல் இடம்பெற்றும் சொல்லும் அளவுக்கு விளையாடவில்லை என்பது தான் உண்மை.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம் கூறுகையில் ; இப்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கும் விஜய் ஹசாரே போட்டியில் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதில் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இல்லாவிட்டால் அந்த இடத்தை ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற சரியான பேட்ஸ்மேன் தான் .

அதேபோல, வெங்கடேஷ் ஐயர் 4 மற்றும் 5 வது இடத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால் ஹார்டிக் பாண்டியவுக்கு பதிலாக இவர் இடம்பெற்றால் சிறப்பான ஒரு மாற்றமாக இருக்கும். முன்பே ருதுராஜ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் இந்திய அணியில் நுழைந்து விட்டனர். ஆனால் இவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றால் நிச்சியமாக அடுத்த உலகக்கோப்பை 2023 ஐ சுலபமாக வெல்ல முடியும் என்று கூறியுள்ளார் சபா கரீம்.

ஹார்டிக் பாண்டியவுக்கு பதிலாக இந்திய அணியில் மாற்றம் வேண்டுமா ?? அல்லது யார் அவர் (ஹார்டிக் பாண்டிய) இடத்தை பிடிக்க சரியான வீரர் ?? என்ற உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments பண்ணுங்க…!!!