ஹார்டிக் இல்லை ; இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான ஆல் ரவுண்டர் இவர் தான் என்று உறுதியாக கூறிய முன்னாள் வீரர்…!

0

நம்ம இந்திய கிரிக்கெட்டை அணியா ? இது என்று வாயடைத்து நிற்கும் அளவிற்கு இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆமாம் கடந்த வாரம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் களமிறங்கியது இந்திய அணி.

அதில் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ் அவுட் செய்தது. பின்னர் சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் 3 – 0 என்ற அளவில் இலங்கை அணியை வாஷ் அவுட் செய்தது இந்திய அணி.

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி வருகின்ற மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியில் சமீப காலமாக ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் அருமையாக விளையாடும் வீரர்களை இந்திய அணியில் தேர்வு செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2021 போட்டியில் இரண்டாம் பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி ரன்களை அடித்து தொம்சம் செய்தார் வெங்கடேஷ் ஐயர். பின்னர் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே கோப்பையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி ரன்களை அடித்துள்ளார்.

அதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்கி வெங்கடேஷ் ஐயர் கடந்த சில போட்டிகளாக சிறப்பாக விளையாடி வருகிறார் வெங்கடேஷ் ஐயர். அதுமட்டுமின்றி ஆல் – ரவுண்டராக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து அசத்தி வருகிறார். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறுகையில் ;

எனக்கு தெரிந்து இப்பொழுது இந்திய அணியில் பட்டைய கிளப்பி விளையாடுகிறது வெங்கடேஷ் ஐயர் தான். 6வதாக களமிறங்கினாலும் ஸ்ட்ரைக் ரேட் 180 வைத்துள்ளார். பேட்டிங் மட்டுமின்றி இப்பொழுது சிறப்பாக பவுலிங் செய்து அசத்தி வருகிறார் வெங்கடேஷ் ஐயர்.

பவுலிங் செய்யும் போது வேகம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் வெங்கடேஷ் ஐயர் பவுலிங்கில் சிறப்பாக பென்ச் கிடைக்குது. அதுமட்டுமின்றி வருகின்ற உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில் பென்ச் சிறப்பாக கிடைக்கும். அதனால் வெங்கடேஷ் ஐயர் அந்த நேரத்தில் உபயோகமாக இருப்பார்.

இந்திய அணியின் தேர்வாளர்கள் தெளிவாக உள்ளனர், ஹார்டிக் பாண்டிய ஒருவேளை அணியில் இடம்பெற்று வெறும் பேட்டிங் மட்டும் செய்தால் பின்னர் அவருக்கான வாய்ப்பு குறைவு தான். ஒருவேளை இருவரும் அணியில் விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடி வருகிறார். வருகின்ற ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் ஹார்டிக் பாண்டிய பவுலிங் செய்வதை வைத்துதான் முடிவு செய்ய போகிறது இந்திய கிரிக்கெட் அணி என்று கூறியுள்ளார் இர்பான் பதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here