இவர்கள் மூன்று பேருக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு இதுதான் முக்கியமான காரணம் ; முழு விவரம் இதோ ;

இன்றுடன் மூன்றாவது டி20 போட்டியில் ஷனாக தலைமையிலான இலங்கை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் விளையாடி வருகின்றனர். அதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய போவதாக முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்தில் இருந்து சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்த இலங்கை அணியின் நிலைமை மிகவும் மோசமானது. பல போராட்டங்களுக்கு பிறகு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 146 ரன்களை அடித்தனர்.

அதில் நிஷங்க்க 1, குணத்திலக்க 0, அசலங்க 4, லியானஜ் 9, தினேஷ் சண்டிமல் 25, ஷனாக்க 74 , கருநரத்னே 12 ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்க உள்ளது இந்திய. இதுவரை நடந்த போட்டிகளில் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதால் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

இன்றைய போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியை கைப்பற்றுமா ?? இல்லையா ??

டாஸ் வீசிய பிறகு அளித்த பேட்டியில் ; நாங்களும் பவுலிங் செய்ய தான் நினைத்தோம். இந்த முறை பும்ரா, புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால் போன்ற மூன்று வீரர்களும் இன்றைய போட்டியில் விளையாட போவதில்லை. அவர்களுக்கு பதிலாக பிஷோனி, குல்தீப் யாதவ் , முகமது சிராஜ் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

எப்பொழுதும் பேட்டிங் செய்வதில் சவாலாக தான் இருக்கும், அதேபோல அனைத்து வீரர்களும் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு விளையாட வேண்டும். இஷான் கிஷான் மருத்துவ மனையில் இருக்கிறார். அதனால் அவர் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

அதுமட்டுமின்றி இன்றைய போட்டி எனக்கு ( ரோகித் சர்மா) 125 வது சர்வதேச டி20 போட்டியாகும். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.