இந்த உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு இவர் மிகவும் முக்கியமான வீரர் ; தினேஷ் கார்த்திக் பேட்டி ;

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை. அதனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்ததால் வெறும் 151 ரன்களை மட்டுமே இந்திய அணியால் கைப்பற்ற முடிந்தது.

அதில் கே.எல்.ராகுல் 3, ரோஹித் சர்மா 0, விராட்கோலி 58, சூர்யகுமார் 8, ரிஷாப் பண்ட் 39, ரவீந்திர ஜடேஜா 13, ஹார்டிக் பாண்டிய 11, புவனேஸ்வர் குமார் 5 ரன்களை அடித்துள்ளனர். விராட்கோலி மட்டும் சூழ்நிலை உணராமல் விளையாடி ஆட்டம் இழந்திருந்தால் இந்திய அணிக்கு இன்னும் மோசமான நிலைமை ஏற்பட்டு இருக்கும்.

பின்பு 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் இறுதி வரை மாஸ் ஆக விளையாடிய ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் (ரிஸ்வான்,மற்றும் பாபர் அசாம்) ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி 17.5 ஓவர் முடிவில் 152 ரன்களை அடித்தனர். அதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில் ;; என்னுடைய ப்ளேயிங் 11ல் கண்டிப்பாக ஷர்டுல் தாகூர்-க்கு வாய்ப்பு கொடுத்திருப்பேன். ஏனென்றால் அவர் சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி, சரியான நேரத்தில் விக்கெட்டை எடுத்து ஆட்டத்தை மாற்றும் திறன் அவருக்கு உள்ளது.

அவர் (ஷர்டுல் தாகூர்) ஒரு பிளான் வைத்திருப்பார். எப்பொழுதும் அதனை சரியாக பின்தொடர்ந்து விக்கெட்டைகளை கைப்பற்றுவார். அவருக்கு அதிக நம்பிக்கையும் உள்ளது. அதனால் அவர் நிச்சியமாக இந்திய அணியில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்…!!!