அடுத்த ஆட்டத்தில் இந்திய அணியின் புதிய ப்ளேயிங் 11 இதுதான் ; இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை ; உத்தேச அணியின் விவரம் இதோ ;;

0

ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2021 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் சூப்பர் 12 நாடுகளுக்கு இடையேயான போட்டிகள் தொடங்கியுள்ளது. அதில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

அதில் இந்திய அணியை வென்றது பாகிஸ்தான் அணி. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகம் உருவானது. அதனால் நிச்சியமாக அடுத்த போட்டியில் பல மாற்றங்கள் இருக்கும் என்பதில் மாற்றமே இல்லை. அதில் சூர்யகுமார் யதாவுக்கு பதிலாக இஷான் கிஷான் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.

ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4வதாக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 11 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதனால் அவருக்கு பதிலாக இஷான் கிஷான் இடம் பெற்றால் நிச்சியமாக விறுவிறுப்பாக பேட்டிங் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்து எப்படியோ 150 ரன்களை அடித்தாலும், பவுலிங் மிகவும் மோசமாக இருந்தது தான் உண்மை. ஏனென்றால் இந்திய அணியில் பல முன்னனி பவுலர்கள் இருந்தும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாதது தான் பிரச்சனை ??

அதனால் பவுலிங் லைனில் நிச்சியமாக மாற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் புவனேஸ்வர் குமார், ஐபிஎல் போட்டிகளில் சொல்லும் அளவுக்கு பவுலிங் இல்லை. அதனால் தான் அவருக்கு பதிலாக ஷர்டுல் தாகூர் இடம்பெற்றால் நல்ல ஒரு பவுலிங் -லைன் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி, கிரிக்கெட் உலகத்தில் முக்கியமான சுழல் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெறாதது பலருக்கு அதிர்ச்சி கொடுத்தது தான் உண்மை. அதனால் அடுத்த போட்டியில் வருண் சக்ரவத்தி-க்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் அல்லது ராகுல் சஹார் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

அடுத்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ப்ளேயிங் 11:

விராட்கோலி, கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, இஷான் கிஷான், ரிஷாப் பண்ட், ஹார்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, ஷர்டுல் தாகூர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் (அல்லது) ராகுல் சஹார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here