இந்திய அணியின் பிரச்சனை இவர் தான் ; ரோஹித் சர்மா எப்படி சமாளிக்க போகிறார் ? இந்திய அணியை எச்சரித்த முன்னாள் இந்திய வீரர் ;

கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடி வருகிறது இந்திய அணி. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை டி20 2021 போட்டிகளில் இந்திய அணி தான் கோப்பை வெல்லும் என்று பலர் நினைத்துக்கொண்டு இருந்தனர்.

ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அதிலும் குறிப்பாக அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் லீக் போட்டிகளில் இருந்து வெளியேறியது இந்திய அணி. அதுமட்டுமின்றி சமீபத்தில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தன.

டெஸ்ட் போட்டியில் 1 – 2 மற்றும் ஒருநாள் போட்டியில் 0 – 3 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கி இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்ற முடியாமல் போனது. அதனால் இந்திய அணியின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க இந்திய அணியின் கேப்டன் பற்றிய சர்ச்சை இப்பொழுது தான் ஓய்வு பெறும் நிலையில் உள்ளது.

ஆனால் இன்னும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனை இன்னும் பிசிசிஐ முடிவு செய்யவில்லை. நிச்சியமாக டோஹிட் சர்மா தான் கேப்டனாக போகிறார் என்று பல தகவல் வெளியாகியுள்ளது. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் அஜித் அகர்கர் அளித்த பேட்டியில் ;

ஒரு அணியாக வெல்ல வேண்டும், அப்படி இல்லையென்றால் தனி வீரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் எந்த பிரியோஜனம் இல்லை. இந்திய அணியின் முக்கியமான வீரராக விராட்கோலி விளையாடி வருகிறார். ஆனால் இப்பொழுது அவரது விளையாட்டு மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது. அதற்கு எப்பையும் அப்படி விளையாட மாட்டார், கூடிய விரைவில் அவரது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.

அதனால் கேப்டனான ரோஹித் ஷர்மாவுக்கு அணியை வழிநடத்துவது மிகவும் சுலமாக அமைந்துவிடும் என்று கூறியுள்ளார் அஜித் அகர்கர்….!!!! வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மோத உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அதில் டோஹிட் சர்மா கேப்டனாகவும் விராட்கோலி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாட உள்ளனர்.