ரோஹித் சர்மாவை விட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இவர் தான் சரியான கேப்டன் ; சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டி ;

0

ஐபிஎல் டி20 2022 போட்டிக்கான ஏலம் வருகின்ற பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றன.

இந்த ஆண்டு ஐபிஎல் டி20 லீக் போட்டிகள் வருகின்ற மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது. அதில் லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளனர். அதனால் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதில் கடந்த ஆண்டு இருந்த 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று கூறியது.

பின்னர் புதிய இரு அணிகளும் தலா மூன்று வீரர்கள் கைப்பற்ற வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை கோப்பையை வென்ற ஒரே அணி தான் மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 யில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் போனது. அதுமட்டுமின்றி சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தான் அதிக முறை கோப்பையை வென்றுள்ள அணி.

இரண்டாவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. இதில் சச்சின் டெண்டுல்கரின் பையன் அர்ஜுன் சமீபத்தில் சமுகவலைத்தளங்களில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த கேப்டன் யார் என்று…! அதற்கு பதிலளித்த அர்ஜுன் , பும்ரா தான் சிறந்த கேப்டன் என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் , பொல்லார்ட் மற்றும் பும்ரா போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ். இந்த முறையும் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெருவாரா ??

இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி ஹார்டிக் பாண்டிய, இஷான் கிஷான், டிரெண்ட் போல்ட் போன்ற முக்கியமான வீரர்களை தவரவிட்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. அதனால் நிச்சியமாக ஐபிஎல் 2022 போட்டியின் ஏலத்தில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here