CSK அணியில் இவர் பேட்டிங் செய்ய வந்ததில் இருந்து பயம் இருந்துகிட்டே இருந்தது ; ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக் ;

போட்டி 1 : இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2022 போட்டிகள் நேற்று இரவுடன் தொடங்கியுள்ளது. அதில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் களமிறங்கி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி சென்னை அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. தொடக்க வீரரான ருதுராஜ் மற்றும் கான்வே போன்ற இருவரும் ரன்களை அடிப்பார்கள் என்று பலர் ஆர்வமாக இருந்தனர்.

ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் ருதுராஜ் எந்த ரன்களையும் அடிக்கலாம், டேவின் கான்வே 3 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டத்தை இழந்தனர். இருப்பினும் அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா போன்ற இருவரும் ரன்களை அடித்தாலும் ஒருவர் பின் ஒருவராக ஆட்டத்தை இழந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தல தோனி மற்றும் சென்னை கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் ரன்களை அடித்து தொம்சம் செய்தனர். அதிலும் மகேந்திர சிங் தோனி இறுதிவரை விளையாடி ஆட்டம் இழக்காமல் 50 ரன்களை அடித்துள்ளார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 131 ரன்களை அடித்தது சென்னை அணி.

பின்னர் 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது. அதில் ரஹானேவின் ஆட்டம் வெறித்தமாக இருந்தது தான் உண்மை. அதில் ரஹானே 44 ரன்களை அடித்துள்ளார். 18.3 ஓவர் முடிவில் 133 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது கொல்கத்தா.

போட்டி முடிந்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் ; எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் (ப்ளேயர் ஆப் தி மேட்ச்) படத்தை வென்றது எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஏனென்றால் அவர் பயிற்சியின் போது அவரது பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. அதுமட்டுமின்றி , அவரது கடின உழைப்பால் தான் இந்த விருதை பெற்றுள்ளார்.

சென்னை அணியில் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்த நிலையில் தோனி பேட்டிங் தொடங்கிய போது எங்களுக்கு தெரியும் ஏதோ ஒன்று நடக்க போகிறது என்று. தோனி என்றதால் முடிந்த வரை பவுலிங்கை கடினமாக வீச செய்தோம். ப்ராவோ எங்கள் பேட்ஸ்மேன்களை திணறவைத்தார்.

இவ்வளவு விஷயங்கள் நடந்தும் இறுதியாக வெற்றியை கைப்பற்றியுள்ளோம். அதனால் இனிவரும் போட்டிகளில் ஒரு நம்பிக்கையுடன் விளையாடுவோம் என்று கூறியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். தோனியின் நேற்றைய விளையாட்டு எப்படி இருந்தது ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!