சிஎஸ்கே ரசிகர்களுக்கு இன்ப செய்தி ; தலைவருக்கு இது இறுதி ஆண்டு இல்லையாம் ; முழு விவரம் உள்ளே ;

ஐபிஎல் :

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஈர்த்த போட்டியாக தான் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் பார்க்கப்படுகிறது. ஆமாம், கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது. பின்பு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய ஆதரவு கிடைத்த காரணத்தால் ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 ஆண்டுகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி அன்று 17வது சீசன் தொடங்க இருக்கிறது.

சமீபத்தில் தான் ஐபிஎல் 17 போட்டிக்கான ஏலம் நடைபெற்று முடிந்துள்ளது. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 போட்டிக்கான தொடர் நிச்சியமாக சுவாரஷியமாக இருக்கும் என்று ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் டி-20 போட்டிகளில் அதிக முறை போட்டிகளில் வென்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. இதுவரை நடந்து முடிந்த ஐபிஎல் தொடர்களில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது சென்னை. அதுமட்டுமின்றி, மற்ற அணிகளில் பல கேப்டன்கள் மாறியுள்ளனர். ஆனால் ஐபிஎல் அறிமுகம் ஆன 2008ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டு வரை சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் மகேந்திர சிங் தோனி.

இருப்பினும் தோனி இன்னும் எத்தனை சீசன் தான் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் ?

கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வை அறிவித்தார். பின்பு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே தோனியின் விளையாட்டை பார்க்க முடிகிறது. அப்படி இருக்கும் நிலையில் 42வயதான மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆமாம் கடந்த ஆண்டு ஐபிஎல் 2023 கோப்பையை வென்ற பிறகு பேசிய தோனி இன்னும் ஓர் ஆண்டு (2024) விளையாட போவதாக அறிவித்தார். அதனால் இந்த ஆண்டு தான் தோனிக்கு இறுதியாக இருக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படியுங்க : “முதல் போட்டியே அசத்தல் தான் ; ஐபிஎல் 2024 தொடக்க போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் ; காரணம் இதுதான் ;

சமீபத்தில் மகேந்திர சிங் தோனியின் ஸ்கூல் நண்பரான பரம்ஜித் சிங் அளித்த பேட்டியில் : “எனக்கு தெரிந்து நிச்சியமாக தோனி இந்த ஆண்டுடன் ஓய்வை அறிவிக்க போவதில்லை. நிச்சியமாக இன்னும் ஒன்று அல்லது இரு ஆண்டுகள் விளையாடுவார். அவர் (தோனி) இப்பொழுதும் பிட் ஆக தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.”

தோனி அடுத்த ஆண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்கிறதா ? உங்கள் கருத்தை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்…..!