முதல் போட்டியே அசத்தல் தான் ; ஐபிஎல் 2024 தொடக்க போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் ; காரணம் இதுதான் ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த போட்டியாக ஐபிஎல் டி-20 லீக் தொடர் திகழ்கிறது. ஆமாம், கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது. அதில் ரசிகர்களிடையே நல்ல இரு வரவேற்பை பெற்றதால் ஆண்டுதோறும் தவறாமல் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 16 சீசன் நடைபெற்று முடிந்த நிலையில் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி அன்று ஐபிஎல் 2024 சீசன் தொடங்க இருக்கிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். கடந்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டிக்கான தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2008 ஆம் ஆண்டில் அதாவது ஐபிஎப் அறிமுகம் ஆன ஆண்டில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

முதல் போட்டியின் விவரம் :

வருகின்ற மார்ச் 22ஆம் தேதி சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. அதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here