இவரை தொடக்க வீரராக விளையாட வைத்தால் இந்திய அணிக்கு பிரச்சனையே இருக்காது ; தினேஷ் கார்த்திக் ஓபன் டாக் ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்த நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான டி-20 சீரியஸ் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இருந்தே நடைபெற தொடங்கியுள்ளது.

இதில் முதல் போட்டி மழை காரணமாக நடக்காமல் போய்விட்டது. ஆனால் நேற்று மதியம் நடைபெற்ற போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கி டார்கெட் செட் செய்ய களமிறங்கியது இந்திய. வழக்கம் போல இந்தியா அணிக்கு தொடக்க ஆட்டம் அமையவில்லை.

ஆனால் சூர்யகுமார் யாதவின் அதிரடியான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 191 ரன்களை அடித்தனர். பின்பு 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணி, ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. தொடக்க ஆட்டத்தில் இருந்து சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் விக்கெட்டை இழந்து கொண்டே வந்த நியூஸிலாந்து அணியால் ரன்களை அடிக்க முடியவில்லை.

18.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 126 ரன்களை மட்டுமே அடித்தது நியூஸிலாந்து அணி. அதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வென்ற இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டம் :

இந்திய கிரிக்கெட் அணிக்கு மற்ற விஷயங்கள் அமைந்தாலும், தொடக்க ஆட்டம் மட்டும் இந்திய அணிக்கு அமையவில்லை என்பது தான் உண்மை. சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டம் பெரிய அளவில் இல்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரின் தொடக்க ஆட்டம் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 15 சர்வதேச போட்டியில் பல வீரர்கள் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடியுள்ளனர். அதில் ரிஷாப் பண்ட், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் தொடக்க வீரராக விளையாடினார்கள். ஆனால் சரியான வீரரை தேர்வு செய்ய முடியாமல் இந்திய அணி திணறிக்கொண்டு வருகின்றனர்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் பினிஷர் தினேஷ் கார்த்திக் கூறுகையில் ; “ஒரு விஷயம் மட்டும் உண்மை, ரிஷாப் பண்ட் நினைத்தால் நிச்சியமாக அனைத்து விதமான ஷாட்ஸ் -களையும் அடிக்க முடியும். கொஞ்சம் விளையாட தொடங்கிவிட்டால் நிச்சியமாக பவர் ப்ளேவில் சிறப்பாக விளையாட கூடிய திறமை அவருக்கு உள்ளது. ரிஷாப் பண்ட் தொடக்க வீரராக விளையாடினால் நிச்சியமாக அதிக ஸ்ட்ரைக் ரேட் இருக்கும். பவுலர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாட தொடங்கினால் நிச்சியமாக எதிர் அணிக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.”

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரிஷாப் பண்ட் 13 பந்தில் வெறும் 6 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணிக்கு யார் தான் தொடக்க வீரராக களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று பதிவு செய்யுங்கள்..!