ரோஹித் சர்மாவிற்கு பதிலாக டி-20 போட்டிக்கான புதிய கேப்டன் இவர் தான் ; கிட்டத்தட்ட உறுதி ;

0

இன்னும் சில மாதங்களில் இந்திய கிரிக்கெட் அணிக்கான கேப்டன் மாற்றப்பட உள்ளதாக பிசிசிஐ உறுப்பினர் ஒருவர் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய :

எப்பொழுது மற்ற அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி பல முறை தொடரையும் வென்றுள்ளனர். ஆனால் உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் மட்டும் தொடர்ந்து தோல்வியை மட்டுமே கைப்பற்றி வருகின்றனர். அதற்கு என்ன தான் காரணமாக இருக்கும் ?

கேப்டன் தான் காரணம் ஆ ?

இந்திய அணிக்கு கடந்த ஆண்டு இறுதி வரை விராட்கோலி தான் கேப்டனாக விளையாடி வந்தனர். பின்பு பல போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து தோல்விகளை பெற்று வருவதால் விராட்கோலியை கேப்டன் பதவியில் இருந்து விளக்க வேண்டுமென்று அவரவர்கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளில் 5 முறை சாம்பியன் படத்தை கைப்பற்ற உதவியாக இருந்த ரோஹித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் இந்திய அணியால் உலகக்கோப்பையை வெல்ல முடியும் என்றும் கருத்துக்கள் எழுந்தன.

ஆனால் மிஞ்சியது ஏமாற்றம் தான். ஆமாம், தொடக்க வீரர் மற்றும் கேப்டனாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையில் சூப்பர் 4 லீக் சுற்றில் இருந்தும் , உலகக்கோப்பை டி-20 போட்டியில் அரையிறுதி சுற்றில் இருந்தும் இந்தியா கிரிக்கெட் அணி மோசமான நிலையில் வெளியேறியது. அதுமட்டுமின்றி, உலகக்கோப்பை போட்டியில் மோசமான தோல்வியை பெற்ற பிறகு இந்திய அணியில் இருக்கும் 20 வயதிற்கு மேற்பட்ட வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமென்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

அதுமட்டுமின்றி,அடுத்த உலகக்கோப்பை 2024 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டுமென்றதால் இப்பொழுதில் இருந்தே அதற்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகிறது இந்திய. அதுமட்டுமின்றி, டி-20 போட்டிக்கான கேப்டனாக பதவியில் மாற்றம் நடைபெற உள்ளதாக பிசிசிஐ உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

அதில் ” ரோஹித் சர்மா சிறப்பாக கேப்டன்ஷி செய்வார் என்று தான் பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் அவருக்கு அதிகப்படியான வேலை சுமை இருப்பது போல தான் தெரிகிறது. அதுமட்டுமின்றி, அவருக்கு (ரோஹித் சர்மா) நாளுக்கு நாள் வயதாகி கொண்டு வருகிறது.”

“அடுத்த உலகக்கோப்பை 2024ல் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற வேண்டுமென்றால் இப்பொழுதில் இருந்தே அதற்கான முடிவுகளை கையில் எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கேப்டன் பதவியிக்கு ஹர்டிக் பாண்டிய பிட் ஆக இருப்பார்.நிச்சியமாக இந்திய அணியின் தேர்வாளர்கள் அதற்கான முடிவுகளை அடுத்த டி-20 உலகக்கோப்பை முன்பே அறிவிப்பார்கள் என்று கூறியுள்ளார்.”

இந்திய அணியின் கேப்டனாக ஆல் – ரவுண்டர் ஹர்டிக் பாண்டிய இடம்பெற்றால் சிறப்பாக இருக்குமா ? இல்லையா ? ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி என்ற காரணத்தால் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமனம் செய்தது சரியா ? தவறா ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here