ஹர்டிக் இல்லை ; இப்படி ஒரு வீரரை உலகக்கோப்பை போட்டியில் மிஸ் பண்ணிட்டீங்களே ; இப்படி ஒரு ஆல் -ரவுண்டர ?

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியின் வெற்றிக்கு முக்கியமான காரணம் இவர் தான்…!

நேற்று மவுண்ட் பே ஓவல் மைதானத்தில் நடைபெற இரண்டாவது டி-20 போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடக்க வீரர்களின் ஆட்டம் பெரிய அளவில் இல்லை என்பது தான் உண்மை. அதிலும் ரிஷாப் பண்ட் 6 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தது மிகப்பெரிய அதிர்ச்சியாக மாறியது. ஆனால் நம்பிக்கை நாயகன் சூர்யகுமார் யாதவ் அடித்த சதத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவித்தன. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 191 ரன்களை அடித்தனர்.

அதில் ரிஷாப் பண்ட் 6, இஷான் கிஷான் 36, சூர்யகுமார் யாதவ் 111*, ஸ்ரேயாஸ் ஐயர் 13, ஹர்டிக் பாண்டிய 13, புவனேஸ்வர் குமார் 1 ரன்களை அடித்தனர். பின்பு 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணி. ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. தொடக்க வீரரான பின் ஆலென் மற்றும் டேவன் கான்வே போன்ற இரு வீரர் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்த நிலையில் 18.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 126 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதில் பின் அலென் 0, டேவன் கான்வே 25, கேன் வில்லியம்சன் 61, க்ளென் பிலிப்ஸ் 12, டேரில் மிச்சேல் 10 ரன்களை அடித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதிற்கு முக்கியமான காரணம் சூர்யகுமார் யாதவ் ஆக இருந்தாலும், இன்னொரு பக்கம் சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்டை கைப்பற்றிய தீபக் ஹூடாவும் தான் வெற்றிக்கு முக்கியமான காரணம். பேட்டிங் செய்து ஒரு ரன்களை கூட அடிக்காமல் விக்கெட்டை இழந்தார். ஆனால் 2.5 ஓவர் பவுலிங் செய்து 10 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 4 விக்கெட்டை கைப்பற்றினார் தீபக் ஹூடா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற்ற தீபக் ஹூடாவிற்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒருவேளை அக்சர் பட்டேலுக்கு பதிலாக தீபக் ஹூடாவிற்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சியமாக உலகக்கோப்பை போட்டியில் ஏதாவது ஒரு மாற்றம் நடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.