இந்த மாதிரியான ஷாட்ஸ் நான் பார்த்ததே இல்லை ; வெறித்தனமான வீரர் இவர் தான் ; கேன் வில்லியம்சன் பேட்டி ;

0

இவருடைய பேட்டிங் மிகவும் அதிரடியாகவும் சிறப்பாகவும் இருந்தது. இப்படி ஒரு ஷாட்ஸ் நான் பார்த்ததே கிடையாது ; கேன் வில்லியம்சன் பேட்டி ;

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும், ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு இடையேயான முதல் டி-20 போட்டிகள் மழை காரணமாக விளையாட முடியாமல் போனது. ஆனால் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் வேறு வழியில்லாமல் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வழக்கம் போல தொடக்க வீரர்களின் ஆட்டம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. ஆனால் எப்பையும் போலவே சூர்யகுமார் யாதவ் அதிரடியாக பேட்டிங் இந்திய அணிக்கு ரன்களை குவித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 191 ரன்களை அடித்தது இந்திய. அதில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 36, சூர்யகுமார் யாதவ் 111 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணி. ஆனால் தோல்வி மட்டும் தான் மிஞ்சியது. ஏனென்றால், சிறப்பாக விளையாடும் தொடக்க வீரர்களான பின் அலென் மற்றும் டேவன் கான்வே தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர்.

சிறந்த தொடக்க ஆட்டம் அமையாமல் திணறிக்கொண்டு இருந்த நியூஸிலாந்து அணிக்கு பார்ட்னெர்ஷிப்-ம் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டு வந்த நியூஸிலாந்து அணி 126 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வென்று, 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய. நாளை நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை கைப்பற்றும், ஒருவேளை நியூஸிலாந்து அணி வென்றுவிட்டால் தொடர் சம நிலையில் முடிந்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

போட்டி முடிந்த பிறகு பேசிய நியூஸிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் கூறுகையில் ; “உண்மையிலும் இந்த போட்டி எங்கள் அணியின் முழு திறமையை வெளிப்படுத்தவில்லை. ஆனால் ஒரு விஷயம் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் உண்மையிலும் சிறந்த ஆட்டம். இந்த உலகத்தில் இப்படி ஒருத்தரை பார்த்ததே இல்லை. இதுவரை நான் பார்த்த பேட்டிங்-ல் இதுதான் மிகவும் சிறந்த ஒன்று. அதுமட்டுமின்றி, சூரியகுமார் யாதவ் அடித்த ஷாட்ஸ் – ஐ நான் பார்த்ததே கிடையாது. நாங்க பவுலிங் சரியாக செய்யவில்லை. அதுமட்டுமின்றி, சரியான நேரத்தில் விக்கெட்டை கைப்பற்றாதது தான் முக்கியமான காரணமும் கூட.”

“நிச்சியமாக எங்களுக்கு இந்த போட்டி ஏமாற்றமாக தான் இருக்கிறது. மறுபடியும் சொல்கிறேன், சூர்யகுமார் யாதவின் பேட்டிங் மிகவும் வித்தியாசமான ஒன்று. ஒருவேளை ஸ்விங் செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும், ஆனால் அதனை இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக செய்தனர் (ஸ்விங்). ஒரு சில இடங்களில் கவனம் செலுத்த வேண்டும். சூர்யகுமார் யாதவ் தான் பெஸ்ட் ப்ளேயர் இந்த உலகத்தில் என்று புகழ்பேசியுள்ளார் கேன் வில்லியம்சன்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here