இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து இவரை வெளியேற்றவே முடியாது ; இவர் அப்படிப்பட்ட பேட்ஸ்மேன் ; முன்னாள் வீரர் உறுதி ;

0

இலங்கை மற்றும் இந்திய அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 365 ரன்களை அடித்து 6 விக்கெட்டை இழந்துள்ளது. இதில் 300க்கு மேற்பட்ட ரன்களை இந்திய அணி கைப்பற்றிய காரணத்தால் இலங்கை அணிக்கு நிச்சியமாக சவாலாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு போட்டி என்று வந்தால் போதும் ஒரு வீரரை பற்றி மற்றொரு வீரர் பேசுவது வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது தான் உண்மை. அதில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் ” எனக்கு தெரிந்து இவருடைய கடந்த காலத்தை பற்றி குறை சொல்லவே முடியாது”.

மேலும் பேசிய தினேஷ் கார்த்திக் : என்னை பொறுத்தவரை அது ஷ்ரேயாஸ் ஐயர் தான். அவருடைய கடந்த கால விளையாட்டு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது தான் உண்மை. ஏனென்றால் அவர் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து சாதனை செய்துள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான நான்கு இன்னிங்ஸ்-ல் 202 ரன்களை அடித்துள்ளார் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

மேலும் சுமன் கில் மற்றும் ஹனுமா விஹாரி பற்றிய பேசிய தினேஷ் கார்த்திக் ; இந்திய அணி ஒருவேளை 7 பேட்ஸ்மேன் மற்றும் 4 பவுலர் என்ற கணக்கில் வீரர்களை வைத்து விளையாடினால் அதில் நிச்சியமாக சுமன் கில் மற்றும் ஹனுமா விஹாரி இருப்பது உறுதி தான்.

அப்பொழுது சுமன் கில் 3வதாக, விஹாரி 6 வதாக மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரை தொடர்ந்து ரிஷாப் பண்ட் விளையாடலாம். ஆனால் ஒருவேளை இந்திய அணியில் 6 பேட்ஸ்மேன் மற்றும் 5 பவுலர் என்ற அடிப்படையில் வீரர்களை வைத்து விளையாடினால் அதில் சுமன் கில் அல்லது விஹாரி ஏதாவது ஒருவர் தான் இடம்பெற முடியும் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

இலங்கை அணிக்கு எதிரான விளையாடிய மூன்று டி-20 போட்டிகளிலும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் இழக்காமல் 57,74,73 ரன்களை அடித்துள்ளார். அதே வேகத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை அடிப்பார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்து கொண்டு இருந்தனர்.

ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது, ஏனென்றால் 48 பந்தில் 27 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here