இவங்க இருவர் இல்லாமல் இந்திய அணியால் எதுவும் செய்ய முடியாது ; இவர்களுக்கு நிகர் யாருமில்லை ; ரோஹித் சர்மா அதிரடி பேட்டி ;

0

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி-20 சமீபத்தில் தான் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் இலங்கை அணியை வென்றுள்ளது இந்திய. அதனை தொடர்ந்து இப்பொழுது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

அதில் முதல் நாள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 357 ரன்களை அடித்தனர். அதில்அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 96 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்துள்ளார். பின்னர் ரவீந்திர ஜடேஜா இப்பொழுது சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இன்று இரண்டாவது நாள் தொடங்கிய நிலையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரும் பேட்டிங் செய்து வருகின்றனர்.

இருப்பினும் இந்திய அணியில் முக்கியமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லை. அது நம்ம ரஹானே மற்றும் புஜாரா தான். இவர்கள் இருவரும் கடந்த சில போட்டிகளில், அதுவும் குறிப்பாக சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் மோசமான ஆட்டத்தை விளையாடினார்கள்.

இதனை கவனித்து வந்த பிசிசிஐ, புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரையும் இந்திய அணிக்கு பதிலாக ரஞ்சி கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி பிறகு இந்திய அணியில் விளையாடலாம் என்று பிசிசிஐ தலைவர் கூறினார். நேற்று போட்டி நடைபெறுவதற்கு முன்பு இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அதில் புஜாரா மற்றும் ரஹானே பற்றிய சில கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ; இங்க பாருங்க புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் இந்திய டெஸ்ட் போட்டிக்கான அணியில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளனர்.

அவர்கள் இடத்திற்கு வேறு எந்த வீரர் வந்தாலும் அவர்களை போல இருக்காது. அவர்கள் இடத்திற்கு யார் வர போகிறார் என்று எனக்கு தெரியாது. அது அவ்வளவு சுலபமும் இல்லை என்பதே உண்மை. புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரின் விளையாட்டை வார்த்தையால் சொல்லவே முடியாது.

ஏனென்றால் கடந்த பல ஆண்டுகளாக இருவரும் கிட்டத்தட்ட 80 முதல் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அவர்களால் பல முறை வெளிநாடுகளில் நடந்த போட்டியில் தொடரை கைப்பற்ற முடிந்தது. இப்பொழுது இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கான பட்டியலில் சிறந்த இடத்தில் இருப்பதற்கு முக்கியமான காரணமே இவர்கள் இருவர் தான்.

ரஹானே மற்றும் புஜாரா போன்ற இரு வீரர்கள் எதிர்காலத்தில் இந்திய அணியில் இருப்பார்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. இந்திய அணியின் தேர்வாளர்களும் அவர்கள் இருவரையும் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்று தான் கூறியுள்ளதாக ரோஹித் சர்மா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here