இவருக்கு இன்னும் எத்தனை நாட்கள் ஓய்வு வேண்டும் ? இது சரியே இல்லை ; இந்திய அணியின் முன்னாள் வீரர் அதிரடி பேட்டி ;

0

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி வருகின்றனர். ஆமாம், கொரோனாவாக இருந்தாலும் மூடியிருக்கும் மைதானத்தில் போட்டிகள் நடந்து வருகிறது. ஐபிஎல், இந்திய மற்றும் தென்னாபிரிக்கா, இந்திய மற்றும் அயர்லாந்து, இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடந்து வருகிறது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு :

இந்திய கிரிக்கெட் அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர். அதிலும் ஐபிஎல் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் அனைத்து வீரர்களும் இந்திய அணியை காட்டிலும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.

இந்திய அணி:

இந்திய கிரிக்கெட் அணியில் இப்பொழுது சில வீரர்கள் சரியாக விளையாடாமல் உள்ளனர். உதாரணத்திற்கு விராட்கோலி கடந்த இரு ஆண்டுகளாகவே பெரிய அளவில் விளையாடவில்லை என்பது தான் உண்மை. முன்பு ஒரு வீரர் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருந்து வெளியேற்றுவது வழக்கம்.

ஆனால் இப்பொழுது அப்படி இல்லை அவருக்கு ஓய்வு கொடுக்கப்படுகிறது. இதனை பற்றி தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.

முன்னாள் வீரர் பேட்டி :

ஆகாஷ் சோப்ரா : “வீரர்களுக்கு எத்தனை போட்டிகளில் தான் ஓய்வு கொடுக்க போறீங்க ? முன்பு ஒரு வேர் சரியாக விளையாடவில்லை என்றல் அணியில் இருந்து வெளியேற்றிவிடுவிர்கள். பின்னர் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பிறகு மீண்டும் இந்திய அணியின் விளையாடுவது வழக்கம்.”

“ஆனால் இப்பொழுது சரியாக விளையாடவில்லை என்றால் ஓய்வு கொடுத்து வருகிறீர்கள். என்னை பொறுத்தவரை ஒரு வீரர் சரியாக விளையாடவில்லை என்றால், அவரால் முடிந்தவரை போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும். கொரோனா அறிமுகம் ஆன நேரத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு 10 மாதம் ஓய்வாக தான் இருந்தது.”

“இது ஒரு முக்கியமான விளையாட்டு என்பதை மனதில் வைத்து விளையாட வேண்டும். இந்திய அணியில் இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பது சந்தோசமாக தான் உள்ளது. முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும்போது இவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.”

“இளம் வீரர்கள் தீபக் ஹூடா, இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடியும், சீனியர் வீரர்கள் அணியில் இடம்பெற்றதிற்காக அணியில் வெளியேற்றப்பட்டது சரியா ? என்று கேள்விகளை எழுப்பியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா.”

ஆகாஷ் சோப்ரா சொன்னது போல, அயர்லாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டிகளிலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியிலும் சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடாவிற்கு அடுத்த இரு போட்டிகளில் விளையாட வாய்ப்பு இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here