கோலி, ரோகித், ராகுல் டிராவிட் இவங்க மூன்று தான் என்னுடைய மாற்றத்திற்கு முக்கியமான காரணம் ; இளம் வீரர் ஓபன் டாக் ;

0

விராட்கோலி, ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் போன்ற மூவரும் தான் என்னுடைய வெற்றிக்கு முக்கியமான காரணம் என்று கூறியுள்ளார் இளம் வீரர்.

இந்திய கிரிக்கெட் அணியில் புதிய மற்றும் இளம் வீரர்களுக்கு பஞ்சம் இல்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் இதுவரை பல இளம் வீரர்களுக்கு அவரவர் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் ஒரு வர தான் இஷான் கிஷான். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆகியுள்ளார்.

23 வயதான இஷான் கிஷான் சமீப காலமாக டி-20 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி, நேற்று முன்தினம் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் களமிறங்கிய இஷான் கிஷான் 89 ரன்களை அடித்து தொம்சம் செய்தார்.

போட்டி முடிந்த பிறகு இஷான் கிஷான் கூறுகையில் ; எப்பொழுதும் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இளம் வீரர்கள் நல்ல விளையாட வேண்டும் என்று நினைப்பது தான் வழக்கம். ராகுல் டிராவிட், விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய மூவரும் இதனை கடந்து தான் வந்திருப்பார்கள்.

அவங்களுக்கு நன்கு தெரியும் இளம் வீரர் நன்கு விளையாடவில்லை என்றால் என்ன நினைப்பார்கள் என்று. நான் (இஷான் கிஷாந் ) வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சரியாக விளையாடவில்லை என்று எனக்கு தெரியும். அப்பொழுது அவர்கள் என்னிடம் ” உன்னை பற்றியும் உன்னுடைய திறமை பற்றியும் எங்களுக்கு நன்கு தெரியும். அதனால் நீ உன்னுடைய திறமையை சந்தேகப்படாமல் விளையாடு என்று கூறினார்கள்.

அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பிறகு அனுபவம் கிடைக்கும். அதிலும் கடினமான காலங்களும் வரும், அதில் நாம் எப்படி சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுகிறோம் என்பதில் தான் உள்ளது. அதிக ரன்களை அடித்தால் ரொம்ப சந்தோஷமும் பட கூடாது.

அதேபோல ரன்களை அடிக்கவில்லை என்றால் அதற்கு வருத்தமும் பட கூடாது. இதனை சமாளிக்க அனுபவம் வாய்ந்த வீரர்களிடம் நான் பேசுவது வழக்கம். ஏனென்றால் அவர்களுக்கு அதிக அனுபவம் இருக்கும் இதில் இருந்து எப்படி வெளிவர முடியும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும். அதுமட்டுமின்றி நான் எப்பொழுதும் இதனை பற்றி ரோஹித் ஷர்மாவிடம் தனியாக பேசுவது வழக்கம் என்று கூறியுள்ளார் இஷான் கிஷான்.

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டிகள் இன்று இரவு லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here