விராட்கோலி இடத்திற்கு இவர் சரியான வீரராக இருப்பார் ; அதில் எந்த மாற்றமும் இல்லை ; முன்னாள் வீரர் உறுதி

விராட்கோலிக்கு காயம் என்றால் அவரது 3வது இடத்தில் விளையாட சரியான வீரர் இவர் தான் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர்.

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டிகள் நடைபெற தொடங்கியுள்ளது. அதில் முதல் போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 199 ரன்களை அடித்தனர். பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை.

ஆனால் எதிர்பார்த்த மாதிரி இலங்கை அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. அதனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்த வந்த நிலையில் வெறும் 137 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

இதில் மூன்றாவதாக களமிறங்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி-கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கி ரன்களை அடித்து தொம்சம் செய்தார். 28 பந்தில் 57 ரன்களை விளாசியுள்ளார் ஐயர். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் ;

இப்பொழுதெல்லாம் அணியில் விளையாடாமல் சும்மா பெஞ்ச்-ல் இருக்கும் வீரர்களும் இப்பொழுது வலுவாக உள்ளனர். அதுவும் கடந்த சில போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் டாப் பேட்டிங் ஆர்டரில் விளையாட அனுமதி கொடுத்து வருகின்றனர். ஆமாம்..! அதுவும் 3வது இடத்தில் களமிறங்கி ரன்களை அடித்து வருகிறார்.

ஒருவேளை விராட்கோலி காயம் ஏற்பட்டால் நிச்சியமாக ஷ்ரேயாஸ் ஐயர் அந்த 3வது இடத்தில் விளையாட சரியான வீரர் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி இந்திய அணியும் அதனை தான் விரும்பி வருகின்றனர் என்று கூறியுள்ளார் சஞ்சய் பங்கர். சமீபத்தில் தான் விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அதனால் இனிவரும் போட்டிகளில் நிச்சியமாக விராட்கோலி அவரது விளையாட்டை விளையாடியே ஆக வேண்டும். ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆகியுள்ளார். ஆனால் சமீப காலமாக அவரது விளையாட்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக இருந்த காரணத்தால் இப்பொழுதெல்லாம் அனைத்து போட்டிகளிலும் இடம்பெற்று வருகிறார் ஷ்ரேயாஸ் ஐயர்.

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டி இன்று இரவு லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா இந்திய அணி..?