வெற்றிக்கு காரணம் வீரர்கள் இல்லை ; இதை நான் அடிக்கடி வீரர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன் ; ரோஹித் சர்மா பேட்டி ;

0

நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. இந்த போட்டி நேற்று மதியம் 1:30 மணியளவில் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. ஆமாம் ..! அதுதான் முக்கியமான காரணமாகும்.

தொடர்ச்சியாக ஒருவர் பின் ஒருவர் என்ற அடிப்படையில் முதல் நான்கு விக்கெட்டை இழந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. பின்னர், ஹோல்டர், ஆலன் போன்ற வீரர்கள் அடித்த ரன்களால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆறுதலாக இருந்துள்ளது. ஆனால் 43.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 176 ரன்களை மட்டுமே அடித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இது ஒருநாள் போட்டி, அதனால் குறைந்தது 250க்கு மேற்பட்ட ரன்களை அடித்திருந்தால் இந்திய அணிக்கு சவாலாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்கு எதிர்மாறாக தான் நடந்தது. இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா விளையாடிய அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 28 ஓவர் முடிவில் வெற்றியை கைப்பற்றியது.

அதில் ரோஹித் சர்மா 60, இஷான் கிஷான் 28, விராட்கோலி 8, ரிஷாப் பண்ட் 11, சூர்யகுமார் யாதவ் 34, தீபக் ஹூடா 26 ரன்களை அடித்துள்ளனர். வெற்றியை கைப்பற்றிய இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் ” நாங்க என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தோமோ, அதனை சரியாக செய்துவிட்டோம். சரியான போட்டியை எப்பொழுது எதிர்பார்க்க கூடாது, அது நடப்பது மிகவும் கடினம். அதுமட்டுமின்றி இந்த முறை நாங்கள் அதிக விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளோம்.

முக்கியமான காரணமே, எங்கள் பவுலர்கள் தான். முதலில் இருந்து இறுதி வரை சிறப்பாக பவுலிங் செய்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்கள். எங்கள் அணியில் இருக்கும் வீரர்களுக்கு ஒரே ஒரு எண்ணம் மட்டும் தான் அணியை வெல்ல வைக்க வேண்டும் என்பது தான்.

இப்பொழுது எங்கள் அணியில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதனை செய்ய வேண்டும். அதற்காக அதிக வீரர்களை மாற்ற வேண்டும் என்பது இல்லை. நான் இரு மாதங்களுக்கு பிறகு இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கியமான காரணம் டோஸ்ஸ்ஸ் வென்றதுதான். ஆனால் நாங்கள் டாஸ்-ஐ நம்பாமல் இருக்க தொடர்ந்து எதிர் அணியின் விக்கெட்டை கைப்பற்றினோம். அது எங்களுக்கு சாதகமாக மாறியது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா….!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here