இவர் ஒன்னும் பெரிய பேட்ஸ்மேன் இல்லை ; வேறு வழியில்லாமல் தான் ரோஹித் சர்மா இப்படி செய்துள்ளார் ; ரசிகர்கள் ஆவேசம் ;

0

இன்று மதியம் 1:30 மணியளவில் அஹமதாபாத் மைதானத்தில் தொடங்கியது முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதி வரை போராடி ரன்களை அடித்தனர். ஆமாம்… 43.5 ஓவர் வரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 176 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதில் ஹோப் 8, பிராண்டன் கிங் 13, ப்ராவோ 18, ப்ரூக்ஸ் 12, பூரான் 18, பொல்லார்ட் 0, ஹோல்டர் 57 ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. இது மிகவும் குறைவான ரன்கள் என்பதால் இந்திய அணி எதிர்பார்த்த படி 28 ஓவரில் 178 ரன்களை அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியுள்ளது. அதில் ரோஹித் சர்மா 60, இஷான் கிஷான் 28, விராட்கோலி 8, ரிஷாப் பண்ட் 11, சூர்யகுமார் யாதவ் 34, தீபக் ஹூடா 26 ரன்களை அடித்துள்ளனர்.

இப்பொழுது இந்தியஐ அணி 1 -0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதற்கிடையில் இந்திய அணி அறிவித்த பிறகு சில முக்கியமான வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் மூன்று வீரர்களை தனிமையில் பிசிசிஐ.

அதனால் யார் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தன. அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, இஷான் கிஷான் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க போகிறார் என்று. ஆனால் அது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் ? இதுவரை இந்திய அணியில் ஓப்பனிங் செய்தது இல்லை, அதுமட்டுமின்றி சமீபத்தில் தான் இந்திய அணியில் அறிமுகம் ஆகியுள்ளார் இஷான் கிஷான்.

சரி அப்படி எத்தனை ரன்களை தான் அடிக்க போகிறார் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தன. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இஷான் கிஷான் விளையாடவில்லை என்பதை தான் உண்மை. 36 பந்தில் 28 ரன்களை அடித்த நிலையில் ஆட்டமிழந்தார் இஷான். இதற்கு மயங்க் அகர்வால் களமிறங்கிருந்தால் பார்ட்னெர்ஷிப் சரியாக அமைத்திருக்க வாய்ப்பு உள்ளது.

ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கு நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் இந்திய அணி தொடரை கைப்பற்றிய பிறகு மூன்றாவது டி-20 போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அசத்திய ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக இஷான் கிஷானை களமிறங்கினார் ரோஹித் சர்மா.

அது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் இஷான் கிஷான் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் மும்பை இண்டீஸ் அணியில் விளையாடி வருகின்றனர். அதனால் ரோஹித் சர்மா இப்படி முடிவு செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளன.

கிரிக்கெட் ரசிகர்கள்..! ரோஹித் சர்மா செய்தது எந்த அளவிற்கு சரி ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள Comments பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here