ராகுல் டிராவிட் தான் என்னுடை ரோல் மாடல் ; முன்னாள் இந்திய வீரர் ராகுல் ட்ராவிடை புகழ்ந்த இளம் வீரர் ; யார் அது தெரியுமா?

இந்திய கிரிக்கட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22 தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

சமீபத்தில் பிசிசிஐ உலக டெஸ்ட் போட்டியில் விளையாட போகும் வீரர்களை பற்றிய விவரத்தை வெளியிட்டது. அதில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, புஜாரா, மயங்க அகர்வால், பும்ரா, அக்சர் பட்டேல், சுமன் கில், விஹாரி, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவி சந்திரா அஸ்வின், இஷாந்த் சர்மா, முகம்மது சிராஜ், முகம்மது ஷாமி, தாகூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், சஹா, அபிமன்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அவ்வப்போது சில வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளை பற்றியும், பிடித்த வீரர்கள் பற்றியும் அவரவருக்கு பிடித்த கருத்தை பேசுவது வழக்கம் அதேபோல தான் இந்திய அணியின் புதிய வீரரான அபிமன்யு ஈஸ்வரன், ராகுல் டிராவிட் பற்றி அவரது கருத்தை கூறியுள்ளார்.

ராகுல் டிராவிட் டிராவிட் பற்றி பேசிய அபிமன்யு ஈஸ்வரன் : உண்மையா சொல்லப்போனால், நான் விராட் கோலி ரசிகன் ஆக இருந்தாலும், என்னுடைய ரோல் மாடல் எப்பையுமே ராகுல் டிராவிட் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார் அபிமன்யு ஈஸ்வரன்.

அதுமட்டுமின்றி, நான் இந்தியா அணியின் A பிரிவில் ராகுல் டிராவிட் தலைமையில் தான் விளையாடினேன், அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. புது புது சூழ்நிலையில் விளையாடும்போது அவரது அறிவுரை என்பது எனக்கு நல்ல வழிகாட்டுதலாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அபிமன்யு ஈஸ்வரன்.

அபிமன்யு , இதுவரை 46 போட்டிகளில் Bengal அணிக்காக விளையாடியுள்ளார். அதில் 43.82 என்ற விகிதத்தில் பேட்டிங் செய்துள்ளார். அதுமட்டுமின்றி 9 சதம் அடித்துள்ளார் அபிமன்யு ஈஸ்வரன். இப்பொழுது அவருக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சீரியஸ் போட்டிகளில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் அதனை சரியாக பயன்படுத்தி இந்திய அணியில் அவரது நிலையில் தக்கவைத்து கொள்வாரா? இல்லையா ? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.