இதனை பற்றி ரோஹித் ஷர்மாவிடம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை ; ஆனால் இப்படி சொல்வர் என்று சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை ; அஸ்வின் ஓபன் டாக்;

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் மூன்று டி-20 போட்டிகளில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இப்பொழுது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். இரு நாட்கள் அருமையாக விளையாடிய இந்திய அணி 574 ரன்கள் அடித்த நிலையில் Declare செய்தனர். அதில் அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 96, ரவீந்திர ஜடேஜா 175 மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 61 ரன்களையும் அடித்தனர்.

574 என்ற ரன்களை அடிக்க முயன்ற இலங்கை அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது. ஏனென்றால் முதல் இன்னிங்ஸ் முடிவில் வெறும் 174 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இலங்கை அணியை மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் விளையாட வைத்தனர். அதிலும் 178 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

அதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடாத நிலையில் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இப்பொழுது இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணியின் வெற்றிக்கு முக்கியமான பங்களிப்பு கொடுத்தது ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தான்.

ஏனென்றால் இவர்கள் ரன்களை மட்டுமின்றி பவுலிங் செய்த ஜடேஜா 9 விக்கெட்டை மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னணி சுழல் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் ;

நான் ரோஹித் ஷர்மாவிடம் என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் நான் பாராட்டுகளைப் பெறுவதில் மிகவும் மோசமாக இருக்கிறேன் என்று நினைத்தேன். அதனை எப்படி வெளிப்படுவது என்று எனக்கு தெரியவில்லை. ஒரு சில நேரங்களில் நான் என்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிடுவேன்.

அப்பொழுது ரோஹித் சர்மா பத்திரிகையாளர்களிடம் பேசியபோது அவர் என்னை பற்றி புகழ்ந்து பேசினார். அதனை கேட்ட நான் எப்படி அதற்கு பதிலளிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன். அதுமட்டுமின்றி, ஜெயந்த் யாதவால் பவுலிங் செய்ய முடியாது என்பதை தெரிந்து கொண்டு.

மற்ற பவுலர்களிடம் ரொட்டேட் செய்தார் ரோஹித் சர்மா. பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது ரவீந்திர ஜடேஜா இரட்டை சதம் அடிக்கட்டும் அதன்பிறகு Declare செய்துவிடலாம் என்று கூறினார். ஆனால் அதற்கு ஜடேஜா தான் ” இல்லை இல்லை அது இப்பொழுது முக்கியமில்லை, அதுமட்டுமின்றி அதனை அடிக்க இன்னும் சில நேரங்கள் ஆகும் என்று கூறிவிட்டார்.

இதனையெல்லாம் பார்க்கும்போது ஒரு கேப்டனாக அவர் செய்யும் செயல் ஒன்றும் புதிதல்ல. அவருடைய (ரோஹித் சர்மா) வேலையை சிறப்பாக செய்துவிட்டார் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னணி சுழல் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின்.