நான் 64 ரன்களை கொடுத்தேன், அப்பொழுது தோனி இதை தான் சொன்னார் ; நான் அப்பொழுது பயந்துவிட்டேன் ; யுஸ்வேந்திர சஹால் பேட்டி ;

கடந்த 2016ஆம் ஆண்டு யுஸ்வேந்திர சஹால் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அப்பொழுது தோனி இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளையாடி வந்துள்ளார்.

இந்திய அணியில் இப்பொழுது யுஸ்வேந்திர சஹாலுக்கு வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. ஆமாம்..! தோனி இந்திய அணியில் இருக்கும் வரை யுஸ்வேந்திர சஹாலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் இப்பொழுது அவ்வப்போது மட்டும் தான் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் களமிறங்கி விளையாடினார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு விக்கெட்டை கைப்பற்றவில்லை. அதுமட்டுமின்றி நீண்ட ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வந்துள்ளார் யுஸ்வேந்திர சஹால், ஆனால் தக்கவைக்கப்பட்டியலில் சஹால் பெயர் இடம்பெறவில்லை.

சமீபத்தில் யுஸ்வேந்திர சஹால், தோனியை பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் ” 2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நான் 64 ரன்களை கொடுத்தேன். அப்பொழுது நான் தோனியிடம் ” இப்போ நான் என்ன பண்றது தோனி” என்று கேட்டேன். அப்பொழுது ” ஒன்னும் இல்லை நீ உன்னோட இஷ்டத்துக்கு பவுலிங் செய் என்று சொன்னார்.

பின்னர் அதிக ரன்களை கொடுத்துவிட்டேன், அப்பொழுது தோனி இது உன்னுடைய நாள் இல்லை, எதை பற்றியும் நீ யோசிக்க வேண்டாம். அதனால் நான்கு ஓவர்களை நிதானமாக முடித்துவிட்டு போ.. என்று கூறினார் மகேந்திர சிங் தோனி. அதனை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால்.

மேலும் தோனியை பற்றி பேசிய யுஸ்வேந்திர சஹால் ; அந்த நேரத்தில் யாராவது உங்களை திட்டினால் நிச்சியமாக நம்முடைய நம்பிக்கை போய்விடும். ஆனால் தோனி இது ஓரு போட்டி தான் ,மிதமுள்ள போட்டிகளில் நீ சரியாக விளையாடு. அதன்பிறகு தான் நான் உணர்ந்தேன் கிரிக்கெட் போட்டிகளில் இப்படி நடப்பது சாதாரணமான விஷயம் என்று கூறியுள்ளார் யுஸ்வேந்திர சஹால்.