எனக்கு அந்த வாய்ப்பு சரியாகத்தான் தோனி கொடுத்தார் ; தோனி தான் என்னை சரியாக புரிந்து கொண்டார்..! ; இந்திய வீரர் புகழ்ந்துள்ளார்..!

0

இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்டுவர்ட் பின்னி சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரரான தோனியை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று ஸ்டுவர்ட் பின்னி அவரது சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். பின்னர் செய்தியாளர்கள், அவரிடம் பல கேள்விகள் கேட்டனர்.

அதில் கிரிக்கெட் வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத தருணம் எது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஸ்டுவர்ட் பின்னி. அதனை பற்றி பேசிய அவர், எனது வாழ்க்கையில் தோனியை நான் என்றும் மறக்கவேமாட்டேன். 2014ஆம் ஆண்டு தோனி தான் என்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் செய்து வைத்தார்.

தோனி, அப்பொழுது இந்த வாய்ப்புக்கு நீங்கள் தகுதியானவர் தான் என்று கூறினார். அதனால் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை எனக்குள் வந்தது என்று கூறியுள்ளார் பின்னி. அதுமட்டுமின்றி, என்னுடைய ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது என்று தோனி என்னிடம் கூறினார்.

கிரிக்கெட் வாழ்க்கையில் பின்னி அவரது திறமையை வெளிப்படுத்தவில்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் அவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. ஒருசில போட்டிகள் வைத்து ஒரு வீரரை நம்மால் கணிக்க முடியாது. ஏன் இப்பொழுது ஓய்வை அறிவித்தார்கள் ?

எனக்கு இப்பொழுதெல்லாம் கிரிக்கெட் வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் கடினம் தான். ஏனென்றால் கொரோனா சூழல் ஏற்பட்ட காரணத்தால். இந்திய அணியில் சரியான சிலருக்கு மட்டுமே வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, என்னால் சரியாக விளையாட முடியவில்லை.

எப்பொழுதும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் விளையாட வேண்டும் அதுமட்டுமின்றி பயிற்சிகளும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் கிரிக்கெட் போட்டிகளில் அதிகமாக ரன்களை அடிக்க முடியும். ஆனால் அது எனக்கு அமையவில்லை.

என்னுடைய ஆட்டத்தில் எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நம் என்னதான் பயிற்சிகள் செய்தாலும் நமக்கு வாய்ப்புகள் சரியாக வர வேண்டும். அப்பொழுதுதான் அந்த ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும், ஆனால் எனக்கு அந்த மாதிரி அமையவில்லை என்று வருத்தத்துடன் கூறினார் ஸ்டுவர்ட் பின்னி.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here