England vs India 2021: இங்கிலாந்து நாட்டில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் நாளை மதியம் 4வது டெஸ்ட் போட்டிகள் தொடங்க உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதில் முதல் இன்னிங்ஸ்-யில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 65.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்து 183 ரன்களை மட்டுமே எடுத்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 84.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்து 278 ரன்களை விளாசினார். பின்பு இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் 10 விக்கெட்டை இழந்து 303 ரன்களை அடித்தனர்.
பின்பு இந்திய அணி 14 ஓவர் முடிவில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ட்ரா செய்தனர். ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை 4வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியை பற்றி பேசிய முன்னாள் இந்திய வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சாளருமான இர்பான் பதான் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்திய அணியில் இவருக்கு நுணுக்கமாக விளையாடுவது தான் சரியாக இருக்கும், கோவப்பட்டு ஒரு பயனும் இல்லை என்று கூறியுள்ளார் பதான்.
யாரை இர்பான் பதான் குறிப்பிட்டு சொல்கிறார் ?
நம்ம இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியை தான் குறிப்பிட்டு சொல்கிறார். விராட்கோலி பந்தை பார்த்து நுணுக்கமாக விளையாட வேண்டும். ஆனால் அவர் ஆக்கிரமிப்பு உள்ளுணர்வோடு யோசிக்கிறார் அதனால்தான் அவரால் சரியாக ரன்களை அடிக்க முடியவில்லை.
விராட்கோலி இதுவரை ஐந்து இன்னிங்ஸ் விளையாடி 124 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதிலும் ஒரே ஒரு அரைசதம் அடித்துள்ளார் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் கூறியுள்ளார். விராட்கோலி இதுவரை 70 சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.