எனக்கு தெரியும், நான் சொல்றது தான் இனிமேல் எல்லாமே ; தோனிக்கு எதிராக பேசுகிறாரா ? ரூட்டுராஜ் ; முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2024:

இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ரூட்டுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கின்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதி விளையாடி வருகின்றனர். இந்த போட்டி சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரரான டூப்ளஸிஸ் மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தி விளையாடினர்.

டூப்ளஸிஸ் 35 ரன்களிலும், விராட்கோலி 21 ரன்களை அடித்த நிலையில் ஆட்டத்தை இழந்தனர். அதன்பின்னர் விளையாட தொடங்கிய ரஜத் படிதர் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் ஒரு ரன்களை கூட அடிக்காமல் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்தனர்.

பின்பு களமிறங்கிய அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை அதிரடியாக அடித்து விளையாடினர். அதனால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 173 ரன்களை அடித்துள்ளது பெங்களூர் அணி.

அதில் விராட்கோலி 21, டூப்ளஸிஸ் 35, ரஜத் 0, மேக்ஸ்வெல் 0, கேமரூன் க்ரீன் 18, அனுஜ் ராவத் 48 மற்றும் தினேஷ் கார்த்திக் 38* ஆகிய ரன்களை அடித்துள்ளனர். அடுத்த இன்னிங்ஸ் விளையாட போகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஒவேரில் 174 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகின்றது.

அதிரடியாக விளையாடுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?

சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேட்டி :

டாஸ் -க்கு பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் மற்றும் இளம் வீரரான ருதுராஜ் கூறுகையில் : “நான் சென்னை போன்ற அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாகவும் , கௌரவமாக இருக்கிறது. நிச்சியமாக நான் என்னுடைய விளையாட்டை சிறப்பாக விளையாடுவேன்.”

தோனியின் உதவி உங்களுக்கு தேவையானதாக இருக்குமா ? இதற்கு பதிலளித்த ருதுராஜ் : ” என்ன ஆனாலும் நான் நானாகவே இருக்கவும் ஆசைப்படுறேன், விளையாடவும் போகிறேன். அதுமட்டுமின்றி, நான் எனக்காக விளையாட வேண்டும், மற்றவர்கள் யாரும் என்னுடைய விளையாட்டை விளையாட வேண்டாம்” என்று கூறியுள்ளார் ருதுராஜ்.

கேப்டன்ஷி பற்றி பேசிய ருதுராஜ் : “நான் கேப்டனாக விளையாட போவது எனக்கே கடந்த வாரம் தான் தெரியும். ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு தோனி எனக்கு ஹிண்ட் கொடுத்தார், அது அப்போ புரியவில்லை, இப்பொழுது தான் தெரிகிறது என்று கூறியுள்ளார் ருதுராஜ் கேப்டன்.”