அவர் சொல்வதை எல்லாம் கேட்டுட்டு இருக்க முடியாது; நான் இப்படி தான் இருப்பேன் ; ரூட்டுராஜ் கெய்க்வாட் ஓபன் டாக் ;

0

ஐபிஎல் 2024:

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2024 போட்டிகள் மார்ச் 22 (இன்று) முதல் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். முதல் போட்டியில் ரூட்டுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளனர்.

இன்றைய போட்டி சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதுவரை இந்த இரு அணிகளும் 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் 20 போட்டிகளில் சென்னை அணியும், 10 போட்டிகளில் பெங்களூர் அணியும் வென்றுள்ளனர். அதனால் சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது அதிகமாக தான் இருக்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : “உண்மையாலும் பெருமையாக தான் இருக்கிறது. ஆனால் நான் எல்லா முடிவுகளையும் நானே எடுக்க ஆசைப்படுகிறேன். மற்றவர்களுடைய பேச்சை கேட்க போவதில்லை. எனக்கு இந்த விஷயம் (கேப்டன்) கடந்த வாரம் தான் தெரியும். ஆனால் தோனி கடந்த வருடமே எனக்கு ஹிண்ட் கொடுத்துவிட்டார்.”

இதில் இரு வருத்தம் நாம் கான்வே மற்றும் பாதிரான -வை மிஸ் செய்ய போகிறோம். அதற்கு பதிலாக ரசின் மற்றும் மிட்சேல் இருப்பதால் அணிக்கு பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார் ரூட்டுராஜ் கெய்க்வாட்.”

ப்ளேயிங் 11 :

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ரூட்டுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ராசின் ரவீந்திர, ரஹானே, டேரில் மிட்சேல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, தோனி, தீபக் சஹார், மஹீஸ் தீக்ஷன, தேஷ்பாண்டே.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :

டூப்ளஸிஸ் (கேப்டன்), விராட்கோலி, ரஜத் பட்டிடர், மேக்ஸ்வெல், கேமரூன் கிறீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், கரண் சர்மா, ஜோசப், மாயங்க் தகர், முகமத் சிராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here