நல்ல வேளை ; இவருடைய பவுலிங் இந்திய அணிக்கு சாதகமாக மாறியது; இனிமேல் இவர் இந்திய அணியில் விளையாடுவார் ; ஹர்டிக் பாண்டிய பேட்டி ;

நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் ஷனாக தலைமையிலான இலங்கை அணியும், ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின.

போட்டியின் விவரம் :

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிர்பார்த்த தொடக்க ஆட்டம் அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தனர். இறுதியாக தீபக் ஹூடா மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரின் பார்ட்னெர்ஷிப் இந்திய அணிக்கு உதவியாக இருந்தது.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 162 ரன்களை அடித்துள்ளனர். அதில் இஷான் கிஷான் 37, சுப்மன் கில் 7, சூரியகுமார் யாதவ் 7, சஞ்சு சாம்சன் 5, ஹர்டிக் பாண்டிய 29, தீபக் ஹூடா 41*, அக்சர் பட்டேல் 31* ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை அணி. தொடக்க வீரரான நிஷங்க 1 ரன்களில் ஆட்டம் இழந்த காரணத்தால் இலங்கை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் கேப்டனான ஷனாக அதிரடியாக விளையாடி 27 பந்தில் 45 ரன்களை விளாசினார். இருப்பினும் இந்திய அணியின் பவுலிங் சற்று வலுவாக இருந்த காரணத்தால் இலங்கை அணி தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர்.

இறுதி ஓவர் வரை போராடிய இலங்கை அணி 160 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் மெண்டிஸ் 28, ஷனாக 45, ஹசராங்க 21, கருணாரத்னே 23* ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். அதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியுள்ளது இந்திய. இப்பொழுது 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு வெற்றியின் காரணத்தை பற்றி பேசிய ஹர்டிக் பாண்டிய கூறுகையில் : “இந்த போட்டி மிகவும் சுவாரஷியமாக தான் இருந்தது. நான் சரியாக தூங்கவில்லை, தண்ணீர் குடிக்கவில்லை, இருந்தாலும் விளையாட கூடிய மனநிலை இருந்தது. எனக்கு தெரிந்து இது போன்ற ஒரு சூழல் தான் அனைத்து இளம் வீரர்களுக்கும் கடுமையான நேரத்தில் உதவியாக இருக்கும். இன்றைய போட்டியில் இளம் வீரர்கள் அவரவர் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.”

“நான் ஐபிஎல் டி-20 லீக் தொடரில் மாவின் பவுலிங்கை பார்த்துள்ளேன். அவருடைய பலம் எது என்று எனக்கு நன்கு தெரியும். அதனால் அவருக்கு உறுதுணையாக இருந்தோம். அதேபோல நானும் ஸ்விங் பவுலிங் வீச முயற்சி செய்தேன். நான் இப்பொழுதெல்லாம் ஸ்விங் பவுலிங் செய்ய தான் கற்றுக்கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.”

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டி நாளை இரவு 7 மணியளவில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி தொடரை கைப்பற்றுமா ? இல்லையா ?