நேற்று இரவு மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 180 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக தவான் 33, லிவிங்ஸ்டன் 60, ஜீட்டேஷ் சர்மா 26 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை அணி.
சென்னை அணிக்கு எதிர்பாராத விதமான பேட்டிங் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது தான் உண்மை. ஏனென்றால் முதல் ஐந்து விக்கெட்டை இழந்த சென்னை அணி 27 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர். ஆமாம், அதனால் தோனி, ஷிவம் துபே இருவருக்கும் அழுத்தம் ஏற்பட்டது.
அதன்பின் ஒருவர் பின் ஒருவராக ஆட்டம் இழந்தனர். 18 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த சென்னை அணி 126 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் ராபின் 13, ருதுராஜ் 1, மொயின் அலி 0, அம்பதி ராயுடு 13, ரவீந்திர ஜடேஜா 0, ஷிவம் துபே 57 ரன்களை அடித்துள்ளனர்.
அதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐபிஎல் 2022யில் இதுவரை சென்னை அணி மூன்று போட்டிகளில் விளையாடி அதில் அனைத்திலும் தோல்வியை சந்தித்துள்ளது. என்ன செய்ய போகிறது சென்னை அணி ??
போட்டி முடிந்த பிறகு பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான் மயங்க் அகர்வால் கூறுகையில் ; ” நாங்க பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது சில தவறுகளை செய்தோம். அதுமட்டுமின்றி, எங்களுக்கு நன்கு தெரியும் நிச்சியமாக 180 ரன்களை சென்னை அணி அடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்று.”
“அதிலும் குறிப்பாக முதலீலையே முக்கியமான விக்கெட்டை எதிர்பார்த்த படி கைப்பற்றிவிட்டோம். லிவிங்ஸ்டன் பேட்டிங் செய்துகொண்டு இருந்த நேரத்தில் அனைவரும் அமைதியாக இருந்தனர். அவர் விளையாடிய சில ஷாட்ஸ் மிகவும் அருமையாக இருந்தது.”
“வைபவ் எப்படிப்பட்ட வீரர் என்பது எனக்கு நன்கு தெரியும், அவரது பவுலிங்கில் முக்கியான இரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஒரு போட்டியில் விளையாடும் போது என்ன வேண்டும் என்று நன்கு தெரியும், அதனால் இனிவரும் போட்டிகளில் நிச்சயமாக நல்ல ஒரு போட்டியை விளையாட உள்ளோம் என்று குறியுள்ளர் மயங்க் அகர்வால்.
மயங்க் அகர்வால் சொன்னது போல சென்னை அணிக்கு 180 ரன்களை அடிப்பது கடினமா ?? லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் இதே மைதானத்தில் தான் சென்னை அணி 210 ரன்களை அடித்துள்ளது…! உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!