என்ன பேசுறீங்க ? இவர் சென்னை அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ; நிச்சியமாக அடுத்த போட்டிகளில் சிறப்பிக்க விளையாடுவார் ; ஜடேஜா உறுதி ;

0

நேற்று இரவு 11வது போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்ய தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு சரியாக தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருப்பினும் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய ரன்களை குவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 180 ரன்களை அடித்தனர்.

பின்பு 181 ரன்கள் அடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்தது தான் உண்மை. தொடக்க வீரரான ருதுராஜ் முதல் இரு போட்டிகளில் விளையாடியது போல 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் மொயின் அலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தனர்.

அதனால் சென்னை அணிக்கு சிறப்பான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. இருப்பினும் தோனி மற்றும் ஷிவம் துபே இருவரும் சிறப்பாக விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் துபே விக்கெட்டை இழந்தார். அதனால் 18 ஓவர் முடிவில் 126 ரன்களை அடித்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது சென்னை அணி.

அதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது பஞ்சாப். அதில் ராபின் 13, ருதுராஜ் கெய்க்வாட் 1, மொயின் அலி 0, அம்பதி ராயுடு 13, ரவீந்திர ஜடேஜா 0, ஷிவம் துபே 57, தோனி 23 ரன்களை அடித்துள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கத்தில் இருந்து சென்னை அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் மிகவும் மோசமான தோல்வியை பெற்றுள்ளனர்.

இதனை பற்றி பேசிய ரவீந்திர ஜடேஜா ; “முக்கியமான நேரம் என்ற அது பவர் ப்ளே தான். ஆனால் அதிலேயே நாங்கள் சில விக்கெட்டை தொடர்ந்து இழந்துவிட்டோம். பேட்டிங் செய்த போது சரியான தருணம் அமையவில்லை போல தெரிகிறது. பின்பு ருதுராஜ்-க்கு சரியான ஒரு போட்டி அமையவில்லை.”

“அவர் எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் எப்பொழுதும் அவரை ஆதரித்து கொண்டே தான் இருப்போம். நான் உறுதியாக சொல்கிறேன், நிச்சியமாக மீண்டும் அவர் அதிரடியான ஆட்டத்தை கூடிய விரைவில் வெளிப்படுத்துவார் என்று கூறியுள்ளார் ரவீந்தர ஜடேஜா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here