நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் மோதினார். அதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 134 ரன்களை அடித்தனர். அதில் ஜேசன் ராய் 2, சஹா 44, வில்லியம்சன் 11, பிரியம் கர்க் 7, அபிஷேக் சர்மா 18, ஹோல்டர் 5, ரஷீத் கான் 17 ரன்களை எடுத்துள்ளனர்.
பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சுலபமாக ரன்களை அடித்துவிடும் என்று நினைத்து கொண்டு இருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றமே. ஏனென்றால் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ருதுராஜ் 45, டூப்ளஸிஸ் 41 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
சிஎஸ்கே அணிக்கு பார்ட்னெர்ஷிப் அமையாமல் இருந்தது. ஆனால் இறுதி ஓவர் வரை விளையாடி 4 விக்கெட்டை இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது சிஎஸ்கே அணி. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 9 போட்டியில் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
போட்டி முடிந்தபிறகு சிஎஸ்கே அணியின் பவுலர் ஹேசல்வுட் அளித்த பேட்டியில் ; நான் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன். அதுமட்டுமின்றி, நான் விளையாடும் அனைத்து போட்டிகளில் இருந்து பல விசியங்களை கற்றுக்கொண்டு வருகிறேன்.
இன்றைய போட்டியில் நன் ஜேசன் ராய் விக்கெட்டை எடுத்தது மிகவும் நன்றான ஒரு விசியம். ஏனென்றால் அவரது விக்கெட் எடுக்காமல் இருந்தால் பின்னர் ரன்கள் அதிகம் ஆக கூடிய வாய்ப்புகள் மிகவும் அதிகமாக மாறிவிடும். நங்கள் பயிற்சியின் போது என்ன செய்கிறோமோ..!
அதனை தான் போட்டியிலும் செய்து வருகிறோம் அதனால் சந்தோசமாக தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி, நான் ப்ராவோவிடம் இருந்து பல விசியங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பிராவோவால் நான் பவுலிங் செய்வதில் சிறப்பாக செயல்படுகிறேன் என்று கூறியுள்ளார் ஹேசல்வுட்.