ஷ்ரேயாஸ், இஷான் கிஷான் இல்லை ; குறிப்பாக போட்டியில் வெற்றிக்கு இவர் தான் முழுக்க முழுக்க காரணம் ; ஷிகர் தவான் ஓபன் டாக் ;

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இப்பொழுது ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டியில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருக்கின்றனர்.

இரண்டாவது போட்டியின் சுருக்கம் :

நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் கேஷவ் மகாராஜ் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் ஏற்படவில்லை என்றாலும் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய ஹென்றிக்ஸ் மற்றும் மார்க்ரம் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

ஆனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்த தென்னாபிரிக்கா அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த தென்னாபிரிக்கா அணி 278 ரன்களை அடித்தனர். அதில் டி-காக் 5, ஜனனிமன் மலன்25, ஹென்றிக்ஸ் 74, மார்க்ரம் 79, க்ளாஸான் 30, டேவிட் மில்லர் 35*, பர்னெல் 16 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

பின்பு 279 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. தொடக்கத்தில் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் பெரிய அளவில் தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இளம் வீரரான இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடியாக பேட்டிங் செய்து ரன்களை குவித்தனர்.

அதனால் 45.5 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 282 ரன்களை அடித்துள்ளது இந்திய. இதில் ஷிகர் தவான் 13, சுப்மன் கில் 28, இஷான் கிஷான் 93, ஸ்ரேயாஸ் ஐயர் 113*, சஞ்சு சாம்சன் 30* ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். அதனால் 7 விக்கெட்டை வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியை வென்றுள்ளது இந்திய.

நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் யார் வெல்கிறார்களோ..! அவர்கள் தான் இந்த தொடரில் வெற்றியை கைப்பற்ற போகின்றனர். போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவான் வெற்றியை குறித்து பேசியுள்ளார். அதில் ” இந்த போட்டி எங்களுக்கு சாதகமாக மாறியுள்ளது. குறிப்பாக நான் தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் கேஷவ் மகாராஜ்-க்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.”

“முதல் பேட்டிங்கை தேர்வு செய்ததற்கு. ஏனென்றால் தொடக்கத்தில் டியூ இல்லாமல் இருந்தது. ஆனால் நாங்கள் பேட்டிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில் டியூ வந்ததால் போட்டி சுலபமாக மாறியது. இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரின் பார்ட்னெர்ஷிப் மிகவும் சிறப்பாக இருந்தது.”

“அதனை பார்க்கவும் அழகாக இருந்தது தான் உண்மை. எங்களுது பிளான் முதல் 10 ஓவரில் எப்படியாவது விக்கெட்டை கைப்பற்ற வேண்டுமென்று தான். ஆனால் மிடில் ஓவரில் கடினமாக மாறியது. எங்களுது பவுலிங் வீரர்கள் சிறப்பாக பவுலிங் செய்துள்ளனர். அதிலும் பலர் இளம் வீரராக விளையாடி வரும் நிலையில் இது போன்ற ஒரு அனுபவம் அவர்களுக்கு நிச்சியமாக உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஷிகர் தவான்.”