இவர் இப்படி கம்பேக் கொடுப்பார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் ; இஷான் கிஷான் போல இளம் வீரராக தெரிகிறார் ; ஹர்பஜன் சிங் பேட்டி ;

0

இவர் என்ன இப்படி மாஸ் ஆக விளையாடி வருகிறார். 36வயதான இவரா இப்படி பேட்டிங் செய்கிறது. இந்திய அணியின் பேட்ஸ்மேனை புகழ்ந்து பேசியுள்ளார் ஹர்பஜன் சிங். யார் அந்த வீரர் ?

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான தொடர் போட்டிகளை எப்பொழுதும் இந்திய ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். ஏனென்றால் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டியில் 1 – 2 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றவில்லை.

ஆனால் கே..எல்.ராகுல் வழிநடத்திய இந்திய அணி மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்தது. ஆமாம்…! தென்னாபிரிக்கா அணி 3 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த காரணத்தால் இந்திய அணியை வாஷ்அவுட் செய்தனர்.

இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சமீபத்தில் அளித்த பேட்டியில் ; இந்திய அணியின் பேட்ஸ்மேனை பற்றி பேசியுள்ளார். அதில் ” ஷிகர் தவான் இந்த மாதிரி விளையாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய அணிக்காக விளையாடும் வீரர் தான் தவான்.

இந்திய அணியில் எந்த இளம் வீரர் ஷிகர் தவானை போல பேட்டிங் செய்து வருகிறார். ஷிகர் தவான் கம்பேக் கொடுத்தது எனக்கு சந்தோசமாக உள்ளது. தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான போட்டியில் இரு அரைசதம் அடித்துள்ளார். தவானின் வயதை பற்றி யாரும் பேச வேண்டாம்.

ஏன் ஒரு சிலருடைய வயதை மட்டும் பாக்குறீங்க ? 39,40 வயதிலும் உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய பல வீரர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி தவானுக்கு இப்பொழுது 36 வயது தான் ஆகியுள்ளது. இளம் வீரரான இஷான் கிஷான் போலவே தவான் இன்னும் பிட் ஆக தான் இருக்கிறார்.

ஒருவேளை தவான் சரியாக பேட்டிங் செய்யாமல் இருந்திருந்தால் நான் அவரை பிட் இல்லை என்று சொல்லிருப்பேன். ஆனால் அவருக்கான நேரம் இன்னும் அதிகம் உள்ளது என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஷிகர் தவான் 79, 29, 61 ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்திய அணியில் ஷிகர் தவான் இடம்பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here