இந்திய அணியில் இதை முதலில் சரி செய்யுங்கள் ; இல்லையென்றால் தோல்வி தான் கிடைக்கும் ; இந்திய அணியை எச்சரித்துள்ளது முன்னாள் வீரர் ;

0

இந்திய அணியில் நடக்கும் தவறுகளை சுட்டி காட்டியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேகார். முழு விவரம் இதோ ;;;

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1 – 2 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது. பின்னர் 0 – 3 என்ற கணக்கில் ஒருநாள் போட்டியில் வாஷ்அவுட் ஆகியுள்ளது இந்திய அணி. இதனை பற்றி பேச்சு தினம்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது.

ஆமாம்… மிகவும் மோசமான நிலையில் ஆட்டம் இழந்த காரணத்தால் இந்திய அணிய அடுத்த தொடரில் அதாவது வெல்லுமா ? என்பதை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இதற்கிடையில் தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான மஞ்சரேகார் இந்திய அணியின் டெஸ்ட் அணியை பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் டெஸ்ட் போட்டியை பற்றி பேசிய அவர் , பல ஆண்டுகளாக இந்திய அணியின் டெஸ்ட் ஓப்பனிங் இடத்தில் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் அதனை சரியாக வழிநடத்தி வருகின்றனர். அதனால் டாப் ஆர்டர் பிரச்சனை இல்லை, இருந்தாலும் 3, 4 மற்றும் 5வது இடத்தில் தான் பிரச்சனை உள்ளது.

ஆமாம்…! ரஹானே, புஜரா மற்றும் விராட்கோலி இருக்கும் இடத்தில் தான் அதிக பிரச்சனை. இவர்கள் மூவரும் அவுட் ஆஃப் பார்மில் உள்ளனர். இந்திய அணியில் இங்கு தான் பிரச்னை உள்ளது என்பதை தெரிந்து கொண்ட பிறகும் சரியான ஆட்களை மாற்றவில்லை என்றால் அணியை தேர்வு செய்வதில் தான் பிரச்சனை உள்ளது.

ஆனால் இப்பொழுது அணியில் இருக்கும் வீரர்களை மாற்றுவதில் ஒரு பயனும் இல்லை. அதனால் ஒரு நல்ல கேப்டன், நல்ல அணி மற்றும் நல்ல ஒரு நிர்வாகம் அமைந்தால் மட்டுமே இந்திய அணிக்கான மதிப்பு இருக்கும். சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டி தான், ரஹானே மற்றும் புஜரா , ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்களுக்கு அது தான் எச்சரிக்கை.

அதேபோல தான் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியும், எனக்கு தெரிந்து இந்திய இப்பொழுது சரியான வீரரிடம் இருப்பதாக தெரியவில்லை என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேகார் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here