ஐபிஎல் 2022: கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். 20 ஓவர் போட்டி என்றதால் அதில் பல விறுவிறுப்பான நிகழ்வுக்கு பஞ்சம் இருக்காது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு போட்டியை மிகவும் பிடித்த காரணத்தால் இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் நடந்து வருகிறது.
ஐபிஎல் போட்டிகளில் மிகவும் புகழ்பெற்ற அணிகளுள் ஒன்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ். இதுவரை நான்கு முறை சாம்பியன் படத்தை கைப்பற்றியுள்ளது சென்னை. அதுவும் கடந்த ஆண்டு சென்னை அணிக்கு தொடக்க ஆட்டம் அருமையாக அமைந்தது தான் முக்கியமான காரணமே.
ஏனென்றால் டூப்ளஸிஸ் மற்றும் ருதுராஜ் கெய்வாட் போன்ற இருவரும் ரன்களை அடித்து தொம்சம் செய்தனர். ஆனால் இந்த முறை மெகா ஏலம் நடைபெற்ற காரணத்தால் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி மற்றும் மகேந்திர சிங் தோனியை தக்கவைத்து சென்னை அணியால் டூபிளெஸ்ஸிஸ் ஐ- கைப்பற்ற முடியாமல் போனது.
ஏலத்தில் பல முயற்சிகளை எடுத்த சென்னை அணியால் மீண்டும் டூப்ளஸிஸ் அணி-கைப்பற்ற முடியவில்லை. அதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கைப்பற்றியது மட்டுமின்றி கேப்டனாகவும் அறிவித்துள்ளது. அதனால் சென்னை ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது.
அதிலும் கேப்டனாக பொறுப்பேற்று பிறகு இப்பொழுது அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியின் போது பெங்களூர் அணியின் கேப்டன் டூப்ளஸிஸ் பேட்டி அளித்துள்ளார். அதில் ” தினேஷ் கார்த்திக் சிறப்பாக தான் பேட்டிங் செய்கிறார்.”
“ஆனால் ஆகாஷ் தீப் பவுலிங் பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆர்ச்சரியமாக உள்ளது. இப்படி ஒரு வீரரா என்று நான் ஆச்சரியத்தில் முழ்கியுள்ளேன்.ஆவர் போல (ஆகாஷ் தீப்) போல ஒரு பவுலர் இந்திய அணியில் கிடைப்பதிருப்பது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது என்று கூறியுள்ளார் டூப்ளஸிஸ்.”
இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 லட்சம் கொடுத்து 25 வயதான ஆகாஷ் தீப் ஐ-கைப்பற்றியுள்ளது. அதேபோல 7 கோடி விலை கொடுத்து டூப்ளஸிஸ் – ஐ கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் நான் டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார் விராட்கோலி.
அதனால் தான் டுப்ளஸிஸ் ஐ-எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அதிக விலை கொடுத்துள்ளது பெங்களூர் அணி. அதுமட்டுமின்றி விராட்கோலி மற்றும் டூப்ளஸிஸ் ஆகிய இருவரும் தான் தொடக்க வீரர்களாக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது..!