சென்னை அணிக்கு எதிரான பந்து வீச்சில் தான் மிகவும் பிரபலமானேன் ; சிஎஸ்கே அணியை பற்றி பேசிய முன்னாள் வீரர் ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. அது ஒரு பக்கம் இருக்க இந்த முறை இரு புதிய அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதில் ஒன்று கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் மற்றும் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் அணியும்.

இதுவரை ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக 14 சீசன் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது 15வது சீசனில் அடியெடுத்து வைக்கப்போகிறது ஐபிஎல். ஐபிஎல் போட்டி ஆரம்பித்தால் போதும் ஒரு வீரர் பற்றி அல்லது ஒரு அணியை பற்றியும், விளையாடிய அனுபவத்தை பற்றியும் தகவலை பகிர்வது வழக்கம் தான்.

அதேபோல தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோஹேல் தன்வீர் அளித்த பேட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி பேசியுள்ளார். அதில் “கடந்த 2008ஆம் ஆண்டு நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வந்தேன். அப்பொழுது சென்னை அணிக்கு எதிரான போட்டியில் நான் விளையாடினேன்.

“அதில் நான் வீசிய பந்து தான் மிகவும் அற்புதமான ஒன்று. அதற்கு முன்பு அந்த மாதிரி பவுலிங் நான் செய்ததே இல்லை. நான் மற்றவையை குறை சொல்லவில்லை. ஆனால் சென்னை அணிக்கு எதிராக வீசிய பந்து தான் என்னை பிரபலமாக்கியது. அதனை என்னுடைய வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்.”

“அதில் நான் பார்திவ் பட்டேல், ஸ்டீபன் பிளெம்மிங், மோர்கல், முரளிதரன், நிதிநி மற்றும் சிவராமகிருஷ்ணன் போன்ற விக்கெட்டை கைப்பற்றினேன். அந்த போட்டியில் நான்கு ஓவர் பந்து வீசி 14 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டை கைப்பற்றினேன். அது எனக்கு மிகவும் முக்கிமான போட்டியாகும் என்று கூறியுள்ளார் தன்வீர்.”

நாளை நடைபெற உள்ள முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளனர். அதில் மகேந்திர சிங் தோனி ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாகவும், ரவீந்திர ஜடேஜா கேப்டனாகவும் விளையாட உள்ளனர்.

ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணி எந்த அளவிற்கு முன்னேற போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது. ரவீந்திர ஜடேஜா கேப்டனாக இருப்பதை பற்றி உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழ் உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here